Pages

Search This Blog

Wednesday, August 31, 2011

செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும்

ஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி "இப்ப நான் எங்கிருக்கேன்ப? என்று பேச ஆரம்பித்து வாக்கிங் கிளம்பி விடும். அதன் பிறகு
மீண்டும் 60 வயசுக்கு ஆயுட் காலம்

இது புதிய ஹாலிவுட் படக்கதை அல்ல! உலகம் முழுக்க சோடாப்புட்டி கண்ணாடியை மாட்டிக் கொண்டு 100க்கணக்கான விஞ்ஞானிகள் இரவு, பகலாக பிணங்களுடன் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிற சர்வமகா நிஜம்!

மனித உடலில் எது ஊன மடைந்தாலும் செயற்கை கருவி, பைபாஸ் சர்ஜரி வரை சரி செய்து விட முடிகிறது. விலங்குகளின் குளோனிங், டெஸ்ட் டிïப் பேபி என பிறப்பின் ரகசியத்தைக் கூட நம்மவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால், ஆதாம்-ஏவாள் காலம் முதல், உயிர் பிரிவதை மட்டும் ஒருவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.

ஒரு வேளை, அப்படி கண்டு பிடித்து விட்டால்...ப வெரி சிம்பிள்! "இப்பத்தான் உங்களை நினைச்சேன். ஆயுசு ஆயிரம் சார் என்று சொல்ல வேண்டியதிருக்கும்ப

உலக விஞ்ஞானிகள் நடத்தி வரும் பகீர் ஆராய்ச்சி களை ஹார்ட் அட்டாக் வராத வகையில் சர்வ ஜாக்கிரதையாக மேலும் படிக்க ஆரம்பியுங்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிலிக்கர் என்பவரது புகைப் படங்கள் தாம் உலகம் முழுக்க உள்ள விஞ்ஞானிகளை மரணத்தை வெல்ல முடியும் என்று உஷார் படுத்தியது. ஏராளமான விலங்குகளின் ஆவி பிரிவதை கடைசி நொடிகளில் கிளிக் செய்து வைத்திருக்கிறார் பிலிக்கர்

இவரது கூட்டாளியான விஞ்ஞானி பி.டபுள்ï போத்தா "கண்ணுக்குத் தெரியும் இந்த ஆவியை ஒரு டெஸ்ட் டிïப்பில் பிடித்து விட்டால் போதும். அக்குவேறு, ஆணி வேறாக ஆராய்ச்சி செய்து மரண ரகசியத்தை கண்டு பிடித்து விடுவோம் என்கிறார்.

வாஷிங்டன், டகோமாவில் உள்ள ஐ.ஏ.என்.டி.எஸ் எனப்படும் இன்டர்நேஷனல் "அசோசியேகன் பார் நியர் டெத் ஸ்டடீஸ் என்ற அமைப்பு மரணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறது. டாக்டர் ஜெப் தலைமையில் பலர் இதன் உறுப்பினர்களாக இருக்கி றார்கள்.

இவர்களுக்கு வேலைப யாராவது சாகப் போவதாக கேள்விப்பட்டால் அவருடன் கடைசி வரை இருந்து, கண்காணித்து, ஆராய்ச்சி செய்வது

தான்!வயிற்றுவலி முதல் ஹார்ட் அட்டாக் வரை மருந்து கண்டுபிடித்த நாம் மூளைச்சாவுக்கும் மருந்து கண்டுபிடிப்பது அவசியம் என்கிறார்கள் இவர்கள்.

சாவுபஎன்பது ஒருசாதா ரண நிகழ்வு. தேவையில்லா மல் இதன் மீது நமக்கு பீதி ஏற்பட்டு விட்டதுபமரணத் திற்கு முன்னதாக முது மைக்கு மருந்து கண்டு பிடிக்க வேண்டும் என்பது இவர்களது கருத்து.

இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் மிக்கேல் சபோம் நான் மரணத்துக்கு மருந்து கண்டு புடிச்சுட்டேன் என்று கத்துகிறார்! ஒருவரது மரணம் எப்போது தள்ளிப் போனதோ, அப்போதே மரணத்தை வென்று விட்டதாகத்தான் அர்த்தம். வேண்டுமானால் இது தொடக்கமாக இருக் கலாம் என்கிற அவர் பாம் ரெனால்ட்ஸ் என்கிற சாகக் கிடக்கிற பெண்மணிக்கு உயிர் பாலித்தவர்.

இருதயமும், மூளையும் முற்றிலும் செயலிழந்து பெரிய, பெரிய டாக்டர்களால் கைவிடப்பட்டு, உடல் டெம்ப ரேச்சர் 60 டிகிரிக்கும் குறை வான பாம் ரெனால்ட்சை தனது நவீன அறுவைசிகிச்சை மூலம் உயிர் பிழைக்க வைத்தி ருக்கிறார் மிக்கேல்.

முழுவதுமாக மரணித்துப் போன எனது மூளையில் முதன் முதலாக ஒரு சின்ன சத்தத்தைக் கேட்டேன். புர்ர்ர்ர்... என்ற அந்த சத்தம் தான் மெல்ல எனக்கு உயிர் கொடுத்தது. சர்வ நிச்சயமாக நான் மரணத்தை உணர்ந்து திரும்பியிருக்கிறேன் என்கிறார் பாம் ரெனால்ட்ஸ்.

இவர்களைப் போலவே கெவின் வில்லியம்ஸ், பெத்தார்ட்ஸ் பெட்டி, ஆன்டர்சன் ஜார்ஜ், சிட்டிசன் ஹெரால்டு, டர்ட் சார்லஸ், என உலகம் முழுவதும் ஏகப் பட்ட விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

உயிர் பிரியும் போது வலிக்குமாப வலிக்காது என்கிறார்கள் இவர்கள் ஒட்டு மொத்தமாக! உடல் உபாதை களால் ஏற்படுவது தான் வலியே தவிர, மரணத்துக்கு வலி கிடையாது என்கிறார் கள்.

செத்துப்போன உடலை ரோபோ போல் நவீனபபஎந் திரங்கள் மூலம் இயங்க வைக்க முடியுமாபபஎன்ற நம்பிக்கையில்பகடந்தப18 ஆண்டுகளாகபபநூதன தயாரிப்புகள் மூலம் போராடிக் கொண்டிருக்கி றார் டாக்டர் பி.எம்.எச். அத்வதார் என்பவர்.

இதெல்லாம் நடக்கிற விஷயமா டாக்டர்பஎன்றால், "எதையும் கண்டுபிடிக்கப்படு வதற்கு முன்னால் நம்புவது கஷ்டம் தான் ரெயில், விமானம், செல்போன்களை எல்லாம் நீங்கள் நம்பவா செய்தீர்கள் என்கிறார்.

இந்த அதிர்ச்சி விஞ்ஞானி கள் உடற்பயிற்சி, உணவு முறை, ஆரோக்ய வாழ்க்கை மூலம் மனித வாழ்வை நீட்டிக்க முடியுமாப என்பது பற்றியும் இயற்கை ரீதியிலான ஆராய்ச்சி செய்யவும் தவற வில்லை. ஒரு சிலரால் மட்டும் எப்படி 110 வயது வரை வாழ முடிகிறதுப என்கிற கேள்விக் குறிக்கும் இவர்கள் ஒருபுறம் விடை தேடிக் கொண்டிருக் கிறார்கள்.

"கடைசி மூச்சு வரை மருத்துவ கருவிகளை கண்டு பிடித்து விட்ட விஞ்ஞானி களின் அருமை பற்றி உங்க ளுக்குத் தெரியவில்லை. நிச்சயம் ஒரு நாள் மரணத்தின் சூட்சுமம் வெளியே தெரிய வரும் என்கிற ரஷ்யவிஞ் ஞானி ஆன்ஸ்டின்பெராக் வெளி உலகுக்கு தெரியாமல் வேறொரு ஆராய்ச்சி நடத்தி வருகிறார்.

இறந்து போன பிணங் களுக்கு ஊசி போட்டு, உடலைப் பிரித்து உள்ளுக்குள் மருந்து, மாத்திரைகளை வைத்து தைத்து, நவீன கருவி கள் மூலம் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து, என்றாவது ஒரு நாள் இது எழுந்து நடமாடும் என்கிற ரீதியில் கடந்த 20 ஆண்டுகளாக இருட்டுக் கூடத்திலேயே தனது பகல் வாழ்க்கையையும் கழித்து வருகிறார்.

இவர்கள் சொல்வதைப் போல் ஒரு வேளை உயிர் ரகசியம் கண்டு பிடிக்கப்பட்டு விட்டால்... பூமி பிதுங்கி வழியும் ஜனத்தொகை, அத்தனை பேருக்கும் உணவு, இருப்பிடம் குடிதண்ணீர் வசதி என மேலும் எழும் ஆயிரக்கணக்கான பூலோக பிரளயங்களுக்கு மேலும் நாம் விடை தேடவேண்டிய திருக்கும்.

"அடேங்கப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே!

87வயசு வரை வாழலாம்

ஐக்கிய நாடுகள் சபை சார்பில் உலகமக்கள் தொகை ஆய்வு அமைப்பு 2050-ம் ஆண்டில் மக்கள் தொகை பற்றி ஒரு ஆய்வு செய்துள்ளது.

இது பற்றிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வரும் 2050-ல் உலக மக்கள் தொகை 920 கோடியாக இருக்கும். அமெரிக்கர்களின் இப்போதைய சராசரி வாழ்நாள் 77.5 ஆண்டுகள் ஆகும். இந்தியர்களின் வாழ்க்கை காலம் 64.7 ஆண்டுகள் முதல் 75.5 ஆண்டுகள் வரை.

2050 ஆண்டு வாக்கில் இந்தியர்களின் வாழ்நாள் இன்னும் 11 ஆண்டுகள் அதிகரிக்கும்.

இந்தியாவில் இப்போது 80 வயதை தாண்டியவர்கள் 78 லட்சமாகவும், 65 வயதை தாண்டியவர்கள் 7 கோடி பேரும், 60 வயதை தாண்டியவர்கள் 33 கோடியாகவும் உள்ளனர். இவர்கள் முறையே வருகிற 2050 ஆண்டில் 5 கோடியே 20 லட்சம் பேர், 24 கோடி பேர், 85 கோடி பேராக இருப்பார்கள். இது மிகவும் ஆபத்தான விஷயமாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5 comments:

கோவி said...

படிச்சதும் தலை கொஞ்சம் கிர்ர்ர்னு இருக்குற மாதிரி இருக்கு.. அவ்ளோ நாள் வாழ்ந்து மட்டும் என்ன சாமி உருப்படியா பண்ண போறோம்?

Sameera Redy said...

ungal seithiyai URL udan pakirnthu kolukiren. thavaru enraal kuripidavum. neenkki vidukiren. nanri. news.puthiyaulakam@gmail.com, http://puthiyaulakam.com

ADIRAI MAJI said...

அப்படின்னா உயிர்னா என்னன்னு முதல்ல கண்டுபிடிக்கனும்.அப்புறம்

////இறந்து போன பிணங் களுக்கு ஊசி போட்டு, உடலைப் பிரித்து உள்ளுக்குள் மருந்து, மாத்திரைகளை வைத்து தைத்து, நவீன கருவி கள் மூலம் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து, என்றாவது ஒரு நாள் இது எழுந்து நடமாடும்/////

இறந்தபின் ஊசி போடுவது முட்டாள்தனம் இரத்த ஓட்டம் இல்லாமல் ஊசி போட்டு என்ன பிரயோஜனம்?
அப்படியே சோதித்தாலும் இதனை முதலில் எளிய உயிர்களில் சோதிப்பதுதான் அறிவுத்தனம்

செய்திகளின் நம்பகத்தன்மையை ஒவ்வொரு பதிவிலும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்

Unknown said...

மிக அருமையான பதிவு நண்பரே, வாழ்த்துகள்.

kankaatchi.blogspot.com said...

உயிர் ஒரு உடலிலிருந்து
மற்றொரு உடலுக்கு
போவதும் வருவதுமாகதான் இருக்கும்

அந்த உயிர் எங்கிருந்து முதலில் புறப்பட்டதோ
அந்த இடத்தை அடையும்வரை

விஞ்ஞானிகள் ஏதாவது அவர்களுக்கு தெரிந்ததை
சொல்லிக்கொண்டே இருப்பார்கள்

ஓருவர் சொன்னதை சில காலம் கழித்து
அதை மற்றொருவர் மறுப்பார்

இப்படியே இந்த உலகம்
போய்க்கொண்டேதான் இருக்கும்

மற்றவர்கள் கூறுவதை கேட்டு யாரும் குழம்பி
தங்கள் வாழ்நாளை வீணாக்கி கொள்ளவேண்டாம்

உங்களுக்குள் செல்லுங்கள்
உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்
முயற்சி செய்யுங்கள்.
அயராது முயற்சி செய்தவர்கள்
உண்மையை அறிந்து கொண்டு
அமைதியாகிவிட்டார்கள்.

Post a Comment