நாம் அணியும் டிசர்ட் ஆடை முதல் , காப்பி கோப்பை , கீ செயின் போன்ற அனைத்திலும் நாம் விரும்பும் பூனை படங்களை ஆன்லைன் எளிதாக உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.cartoonizemypet.com/catoonizer/
மூன்று எளிதான வழி முறைகளில் நாம் பூனை கார்டூன் உருவாக்கலாம் , முதலில் படம் 1-ல் காட்டியபடி Features என்பதில் பூனையின் உடல் பாகங்களான தலை , வால், காது, கண் , மூக்கு , மீசை , வாய் போன்ற அனைத்தையும் ஒவ்வொன்றாக சொடுக்கி வலது பக்கம் மற்றும் இடது பக்க அம்புகுறியை சொடுக்கி விரும்பிய வடிவத்தை தேர்ந்தெடுக்கலாம். அடுத்து இருக்கும் Markings என்பதை சொடுக்கி தேர்ந்தெடுத்த பகுதிகளுக்கு விரும்பும் வண்ணம் மற்றும் டிசைன் உருவாக்கலாம் எல்லாம் உருவாக்கிய பின் Export என்பதை சொடுக்கி நாம் உருவாக்கிய பூனை டிசர்ட் முதல் காப்பி கோப்பை வரை அனைத்திலும் இருந்தால் எப்படி இருக்கும் என்று காட்ட்ப்படும், எந்த வித பணமும் செலவழிக்காமல் எளிதாக அழகான கார்டூன் பூனை படம் உருவாக்கலாம்
3 comments:
புதிய தகவல்....
முயல்கிறேன்..
பிளாக்கில் கலரெல்லாம் கொஞ்சம் அழகா எழுத்துக்கள் தெரியுறமாதிரி வையுங்க பாஸ்...
படிப்பதற்க்கு கடினமாக இருக்கிறது...
ப்லாக் பேஜ் background மற்றும் எழுத்துக்கள் நிறமும் கிட்டத்தட்ட ஒரே நிறமாக இருப்பதால், வாசிக்க கடினமாக இருக்கிறதுங்க.
Post a Comment