Pages

Search This Blog

Wednesday, August 17, 2011

இந்தியாவின் வல்லரசு கனவா...நனவா...

உலகின் பெரிய ஜனநாயக நாடாக இந்தியாஇருக்கிறது. விண்வெளி, மருத்துவம், கல்வி,பொருளாதாரம்,ராணுவம்,அணு சக்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உலகளவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைஎட்டியுள்ளது. ஆனால் வல்லரசு நாடாக உருவாவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும். ஏனெனில்வல்லரசாக வேண்டுமெனில் பல்வேறு துறைகளில் நாம் மேலும் வளர்ச்சியடைய வேண்டும். உலகில் தற்போதுஅமெரிக்கா வல்லரசு நாடாக விளங்குகிறது. சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த நூற்றாண்டில் வல்லரசு நாடாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
வல்லரசு நாடு என்பது உள்நாட்டிலும், உலக நாடுகள் மத்தியிலும் செல்வாக்கைநிலைநிறுத்தும் தகுதியை பெற்றிருக்க வேண்டும். உலகின் எப்பகுதியிலும் தனது ஆதிக்கத்தை பயன்படுத்தும் அளவுக்கு ஆதிக்கம் மிக்கதாக இருக்க வேண்டும். நமது ராணுவம் உலகில்இரண்டாவது இடத்திலும், விமானப்படைநான்காவது இடத்திலும், கடற்படை மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்திய வியாபார நிறுவனங்கள், வெளிநாடுகளில் கிளைகளை கொண்டுள்ளன. சாப்ட்வேர் துறை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியர்கள் உலகில் அனைத்துபகுதிகளிலும் வாழ்கின்றனர்.

இந்தியா சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள்ஆகிவிட்டன. இந்த ஆண்டுகளில் இந்தியாவல்லரசாக முடியவில்லை. இதற்கு பலகாரணங்கள் உள்ளன. இருந்தாலும் வல்லரசுஆவதற்கு இன்னும் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டும். இந்தியா 2020ம் ஆண்டுக்குள் வல்லரசாகும் என்பது நாட்டின் முன்னாள் ஜனாதிபதிஅப்துல்கலாம் அவர்களின் கருத்து.இவரது கூற்று நிறைவேறுமா என்று பார்த்தால் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒருசாரார் கண்டிப்பாக முடியும் எனவும், இன்னும் அதிக ஆண்டுகள் ஆகும் எனவும் கருதுகின்றனர். நாடு வல்லரசாக வேண்டுமெனில், இதற்கான பொறுப்பு மாணவர்கள், இளைஞர்கள் மட்டு
மல்லாது, அனைவரிடமும் உள்ளது. என்ன செய்யலாம்?

இந்தியா 2020ம் ஆண்டுக்குள் வல்லரசாக வேண்டுமெனில் சில துறைகளில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். சீனாவுடன் ஒப்பிடுகையில், நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாகத் தான் உள் ளது. நிலவுக்கு நாம்இன்னும் மனிதனுடன் செயற்கைகோளை அனுப்பவில்லை. 5,500 கி.மீ., தூரத்தை தாண்டி பாயும் ஏவுகணைகள் நம்மிடம் இல்லை. நாட்டில் உள்ளநதிகளை இணைத்தால் அனைத்து பகுதிகளும் வளம் பெறும். நமது அரசியல்வாதிகளிடம் இது பற்றி ஒருமித்த கருத்து இல்லை. இத்திட்டத்தை இப்போது துவக்கினால் தான் அடுத்த10 ஆண்டுகளிலாவது செயல்படுத்த முடியும்.

* ஆண்டுதோறும் நாட்டின் பட்ஜெட்டில் ராணுவத்துறைக்கு தான் அதிகளவில் செலவிடப்படுகின்றன.
இருப்பினும் மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது ராணுவ தளவாடங்கள்
நவீனமிக்கதாக இல்லை. இக்குறையை போக்க வேண்டும்.
* இன்ஜினியரிங், டாக்டர்கள், வக்கீல்கள் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுவோர், பணிக்காலத்தில், சிறிது காலம் கட்டாயம் கிராமங்களில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு பணியாற்றுபவர்களுக்கு வரிச்சலுகை அளிக்கலாம். இதனால் கிராமப்புற வளர்ச்சி மேம்
படும். கல்வித்துறையில் சீரான இடைவெளியில் மாற்றம் கொண்டு வரவேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படவேண்டும்.
* பொதுமக்களும் தங்களது பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும். அப்போது தான் தகுதியானவர்கள் தேர்ந் தெடுக்கப்பட முடியும். 
* பல அரசு துறைகள் செயல்படாதவையாக உள்ளன. ஊழியர்கள், கடமையை
செய்வதற்கு லஞ்சத்தை எதிர்பார்ப்பது கேவலமானது.

மேலும் சட்டத்துக்கு புறம்பான வேலைகளுக்கு மக்கள் அணுகும்போது அதை ஊழியர்கள் அனுமதிக்கக்கூடாது. அப்படி செய்தால் சட்டவிரோத குற்றங்களை தடுக்கலாம். இன்று நாட்டில் எங்கு பார்த்தாலும் ஊழல், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அரசு ஊழியர்கள் தங்களது கடமையை செய்வதற்கே லஞ்சம் கேட்கின்றனர். எனவே ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும். நாட்டின் சட்டதிட்டங்கள் மிகவும் எளிமையாக இருப்பதால் தான் பயமில்லாமல் ஊழலில் ஈடுபடுகின்றனர். இந்தியர்களின் கறுப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்படுகிறது. இதனால் நாட்டிற்குவரவேண்டிய வருமானம் தடைபடுகிறது.

* மக்கள்தொகை என்பது நமது நாட்டின் வளர்ச்சியில் தடைக்கல்லாக இருக்கிறது என்று பெரும்பாலோனோர் கருதுகின்றனர். ஆனால் மக்கள்தொகை உயரும் போது, அனைவரும் படித்தவர்களாக இருக்கும் போது, இதை ஆக்கபூர்வ சக்தியாக மாற்றலாம். 
* "கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு' என்று மறைந்த மகாத்மா காந்தி
யடிகள் கூறினார். இவரது கூற்று நூறு சதவீதம் உண்மை. ஏனெனில் நமது மக்கள்தொகையில் 51.5 சதவீதம் பேர் கிராமங்களில் வாழ்வதாக சமீபத்திய சென்செஸ் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்பகுதிகள் எந்தளவுக்கு முன்னேற்றப்பட வேண்டியுள்ளதை அறியலாம். மொத்த மக்கள்தொகையில் பாதிபேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். இந்த 21ம் நூற்றாண்டிலும் அதிகளவிலான கிராமங்களில் சாலை வசதி, போக்குவரத்து மின்சாரம், குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகள் இல்லை. ஒவ்வொரு மாவட்ட தலைநகருடன், அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களின் சாலைகளும் இணைக்கப்படவேண்டும்.

தேசியக் கொடி பிறந்த கதை:தேசிய கொடியை வடிவமைத்தவர் ஆந்திராவைசேர்ந்த பிங்கிலி வெங்கையா. இவர் பிரிட்டிஷ் இந்தியராணுவம் மற்றும் ரயில்வே துறைகளிலும் பணியாற்றினார்.1921ல் இந்திய தேசிய காங்கிரஸ் பொது மாநாடு,காக்கிநாடாவில் நடைபெற்ற போது, காந்தியின் வேண்டுகோளை ஏற்று மூன்று வண்ணங்கள் மற்றும் நடுவே அசோக சக்கரத்துடன் கூடிய தேசியக் கொடியை வடிவமைத்தார். இது விஜயவாடாவில் நடந்த பொது மாநாட்டில் வெளியிடப்பட்டு, தேசிய கொடியாக முன்மொழியப்பட்டது.

இளமை இந்தியா:""நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களைத் தாருங்கள்;இந்தியாவை உயர்த்திக் காட்டுகிறேன்'' என்று விவேகானந்தர்கூறினார். இளைஞர்களால் ஒரு செயலை எளிதாகவும், சிறப்பாகவும் செய்து முடிக்க முடியும். இதனாலேயே விவேகானந்தர் ஆணித்தரமாகஇளைஞர் சக்தியை நம்பினார். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் இந்தியாவை அனைத்து துறையிலும் உயர்த்தி வருகின்றனர். இந்த எழுச்சியால், இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது, என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடுகளே பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக் கொண்டன. இந்தியா இதிலிருந்து தப்பித்து சீரான வளர்ச்சி அடைந்து வருவது, உலகநாடுகளை வியப்படையச் செய்தது. இந்தியர்களின் கடின உழைப்பு தான், வளர்ச்சிக்கு காரணம்.

இந்தியாவின் மக்கள்தொகை,தற்போது 121 கோடி. உலக மக்கள் தொகையில் நாம் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். சில ஆண்டு களுக்கு முன், மக்கள்தொகை பெருக்கம் நமக்கு சவாலாக இருந்தது. தற்போது அந்த சவால், நமக்கு சாதகமாகி வருகிறது. இந்திய மக்கள்தொகையில் இளைஞர்கள் அதிகரித்திருப்பதே இதற்கு காரணம். இது நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 50 சதவீதம் பேர் இளைஞர்கள். இந்த இளமைத் துடிப்பு எந்த நாட்டுக்கும் இல்லை. சுதந்திரத்தின் போது, கல்வி, விவசாயம், தொழில்நுட்பம் என்று பல்வேறு துறைகளில் இந்தியா, பின்தங்கியே இருந்தது.84 சதவீதம் பேர் அப்போது கல்லாதவர்கள்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.8 சதவீதத்துடனும், ஆண்டுக்கு 2 சதவீத மக்கள் தொகை வளர்ச்சியுடனும் பெரிய சுமையுடனே இந்தியாமுன்னேற்றப் பாதையில் மெல்ல அடி எடுத்து வைத்தது.கல்வி வாய்ப்பின்மை, ஏழ்மை, மோசமான சுகாதாரம், வேலை வாய்ப்பின்மை என்று ஏராளமான பிரச்னைகளை சமாளிக்க வேண்டிய நிலை. உலக நிலப்பரப்பில் 2 சதவீதமே இந்தியாவினுடையது. ஆனால், உலகின் ஆறில் ஒருவர் இந்தியர். இன்று அனைத்து துறைகளும் வளர்ந்திருக்கின்றன. சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளுக்கிணங்க, இளமை சக்தியுடன்இந்தியா விரைவில் வல்லரசாக மாறும்.

சுதந்திரம் பெற்ற இரவு நடந்தது என்ன?""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளிலே நம்முன்னோர்கள் பெற்ற சுதந்திரத்தின் மதிப்பை அறியலாம். கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களின் சகாப்தம், 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி இரவு முடிவுக்கு வந்தது. அன்றைய தினம் இரவு என்ன நடந்தது...

டில்லியில் பார்லிமென்ட் கூடியது. காந்தி, நேரு, மவுண்ட் பேட்டன் உள்பட பல முக்கிய தலைவர்கள் கூடினர். சுதேசா கிருபளானி வந்தே மாதரம் என்ற பாடலை பாடினார். ராஜேந்திர பிரசாத் கூட்டத்தின் தலைமை உரையை வாசித்தார். நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. முதல் பிரதமராக நேரு பதவியேற்றார். கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன், ஆட்சி அதிகாரத்தை நேருவிடம் ஒப்படைத்தார். ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட நேரு, "விதியுடன் ஒரு போராட்டம்' என்ற தலைப்பில் சிறப்பான உரை நிகழ்த்தினார்.அதில், "" இன்று நாம் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை முழுமையாக அடையவில்லை என்றாலும் கணிசமான அளவு அடைந்து விட்டோம். உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தியா சுதந்திரத்தையும் புது வாழ்வையும் பெறுகிறது. புதிய சகாப்தம் இன்று துவங்குகிறது. வரலாற்றில் மிகவும் அரிதானதருணம் இது. நீண்ட காலம் அடைபட்டுக் கிடந்த ஒரு நாட்டின் மறுமலர்ச்சி இன்று புத்துயிர் பெறுகிறது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கவும், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லவும், மக்களின் சேவைக்காவும், மனிதநேயத்திற்காகவும் அர்ப்பணித்து அயராது உழைப்போம்.

சக்கரம் என்ன சொல்கிறது?நமது தேசிய கொடியில் உள்ள சக்கரம், சாரநாத்தில் உள்ள அசோகர் ஸ்தூபியிலிருந்து எடுக்கப்பட்டது. ஜூலை 22 ஆம் நாள், 1947 ம் ஆண்டு
இந்திய அரசால் இது ஏற்றுக் கொள்ளப்பட்டது. சக்கரம், 24 ஆரங்களுடன் கூடிய நீல வண்ணமுடையது. இது சத்தியம், தர்மம், சட்டம் ஒழுங்கு, உண்மை போன்றவற்றை கடைப்பிடித்து, நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று உணர்த்துகிறது.

தாயுடன் சேர்ந்த சேய்கள்:வெள்ளையர் ஆட்சிக் காலத்தில், இந்தியாவில் 565 சுதேசி சமஸ்தானங்கள் இருந்தன. வெள்ளையர்களுக்கு வரி கட்டிக்கொண்டு இருந்த சமஸ்தான மன்னர்கள், நாடு சுதந்திரம் அடைந்த பின்னும் தனி நாடுகளாக இருக்க வேண்டும் என்று எண்ணினர். இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பதவியேற்ற பின், சுதேச சமஸ்தானங்கள் அனைத்தும் இந்தியாவுடன் இணைய வேண்டும் என வேண்டுகோள்விடுத்தார். அதன்படி பிகானிகர், பாட்டியாலா,குவாலியர், பரோடா முதலிய சமஸ்தானங்கள்இந்தியாவுடன் உடனடியாக இணைய முன்வந்தன.

பின், அப்போதைய உள்துறை அமைச்சர்சர்தார் வல்லபாய் படேலின் முயற்சியால் 552சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைந்தன. ஆனால் காஷ்மீர், ஐதராபாத், திருவாங்கூர்,ஜூனாகத் போன்ற சில சமஸ்தானங்கள், தனி நாடாக இருப்போம் என்று அடம் பிடித்தன.ஐதராபாத்தை நிஜாம் ஆண்டு வந்தார். 1948 செப்டம்பர் 13 ம் நாள் இந்திய ராணுவம் ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைத்தது. பின்ஜூனாகத், காஷ்மீர், திருவாங்கூர் சமஸ்தானங்கள்இந்தியாவுடன் இணைந்தன. தமிழ்நாட்டில் இருந்த ஒரே சமஸ்தானம் புதுக்கோட்டை. இதை ஆண்டராஜகோபால் தொண்டமான், 1948 மார்ச் 3ம் நாள்இந்தியாவுடன் இணைந்தார்.

மக்கள் தொகை: அப்போதும் இப்போதும்:சுதந்திரம் அடைந்த போது, நமது நாட்டின் மக்கள் தொகை 31 கோடியே82 லட்சம். தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி. அதாவது சுதந்திர இந்தியாவில்90 கோடி பேர் பிறந்துள்ளனர்.

1 comment:

சக்தி கல்வி மையம் said...

வெறும் கனவாதான் போயிடும்..

Post a Comment