Pages

Search This Blog

Wednesday, August 31, 2011

த‌மிழக ஆளுநராக ரோசய்யா இன்று பதவியே‌ற்பு

தமிழக‌த்‌தி‌ன் புதிய ஆளுநராக நிய‌மி‌க்க‌ப்ப‌ட்ட ஆ‌ந்‌திரா மு‌ன்னா‌ள் முதலமை‌ச்ச‌ர் ரோசய்யா இன்று மாலை பத‌வியே‌ற்று‌க் கொ‌ள்‌கிறா‌ர்.


தமிழக ஆளுநராக இரு‌ந்த சுர்ஜித் சிங் பர்னாலா பதவிக்காலம் கடந்த ஜூ‌ன் 20ஆ‌ம் தே‌தி முடிவடைந்ததை‌த் தொட‌ர்‌ந்து புதிய ஆளுநராக ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமை‌ச்ச‌ர் ரோசய்யா நியமிக்கப்பட்டார்.

78 வயதாகும் ரோசய்யா பதவி ஏற்பதற்காக இன்று காலை 11.15 மணிக்கு விமானத்தில் சென்னை வந்து சேருகிறார். மாலை 4.22 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுந‌ர் மாளிகையில் அவ‌ர் பதவியே‌ற்று‌க் கொ‌ள்‌கிறா‌ர்.

ஆந்திரா மேல் சபை உறுப்பினராக இருந்து வந்த ரோச‌ய்யா நேற்று தனது மே‌ல் சபை பதவியை ராஜினாமா செய்தார். இத‌ற்கான ‌விலக‌ல் கடித‌த்தை மேல் சபை தலைவர் ஏ.சக்ரபாணி‌யிட‌ம் கொடுத்தார்.

No comments:

Post a Comment