தேசியம்  என்பது மக்களின் சிறப்பான மன  எழுச்சியாலும் செயற்திறனாலும் தோன்றி  நிலைத்து நிற்கிறது தேசியம் என்பது  உணர்வு மாத்தரமல்ல, உருவமும் கூட  தேசியத்தின் உணர்வுக்கு உருவம் கொடுப்பவை  தேசியச் சின்னங்கள் அவை  காலத்தைக் கடந்து நிற்கின்றன.
  
தேசிய சின்னங்கள் மாறாது இருப்பதோடு மாற்றத்திற்கு உட்படாத வலுப் பொருளாகவும் இருக்கின்றன.
தேசியம்  என்பது ஒரு இனத்தையும், அந்த இனம்  வாழும் இடத்தையும் குறிப்பிடுகிறது.  தேசியம் வலுவான சக்தி, தேசியச்  சின்னங்கள் தேசியத்திற்குரிய  முக்கியத்துவம் தேசியச் சின்னத்திற்கும்  உண்டு. 
தேசியம்  என்ற கருப்பொருளுக்கு உருவம் கொடுப்பவை தேசியச் சின்னங்கள்  என்று  அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கொடி, தேசியப் பறவை, தேசிய மரம், தேசிய   விலங்கு, தேசியப் பூ என்பனவாகும். தேசியத்தை வளர்த்த பிதாமகர்கள் இவற்றைத்   தெரிவு செய்கிறார்கள். 
காலம்  தனது வரலாற்றுப் பதிவை தேசியச் சின்னங்களுக்கு வழங்குகிறது.  தேசியச்  சின்னங்கள் தேசியத்திற்கு நிகரானவை. தேசியம் என்பது உன்னதமான  உணர்வு.  தேசியச் சின்னம் உணர்வின் உருவம். 
தேசியச்  சின்னங்கள் எழுச்சி வடிவங்கள். அவை உருமாற்றம்  செய்யப்படுவதில்லை.  தேசியத்திற்குரிய மக்கள் கூடும் இடங்களில் தேசியச்  சின்னங்கள் முன்னிலைப்  படுத்தப்படுகின்றன. 
தேசிய சின்னங்கள் மாறாது இருப்பதோடு மாற்றத்திற்கு உட்படாத வலுப் பொருளாகவும் இருக்கின்றன.
தமிழீழத்தின்  தேசியக் கொடி புலிக் கொடி. இறையாண்மை பெற்ற நாடுகளின்  தேசியக் கொடிகள்  ஆரம்பத்தில் நாட்டு மக்களின் ஒரு பகுதியினரின் கொடியாகவே  தொடங்கியுள்ளன.  பின்பு நாட்டின் கொடியாகப் பரிணமித்துள்ளன. இது உலக நியதி. 
ஈழத்தமிழர்  தம் புலிக்கொடி முழு தமிழர்களின் தேசியக்கொடி. இதில்  மாற்றுக்  கருத்திற்கு இடமில்லை. தேசிய நாட்கள் நிகழ்ச்சிகள் ஒன்று கூடல்கள்   என்பனவற்றில் புலிக்கொடியை ஏற்றுவது பறக்க விடுவது நியாய பூர்வமானது. அது   உலக ஒழுங்கில் ஏற்றுக் கொள்ளப்படும் நிகழ்வு. 
அண்மைக்  காலமாக ஈழத்தமிழர்களின் நிகழ்ச்சிகளிலும் ஒன்று கூடல்களிலும்  தேசியக்  கொடிக்குரிய உயர் மதிப்பு அளிக்கப்படாமல் தவிர்க்கப்படுகின்றது.  இதை கண்டு  வருந்துகிறோம். தேசியக் கொடிக்குரிய மதிப்பை வழங்கும் உரிமை  ஒவ்வொரு  ஈழத்தமிழனின் கடமை. 
ஈழத்  தமிழர்களின் தேசியப் பறவை "செண்பகம்" தேசியமரம் "வாகை", தேசியப் பூ  "கார்த்திகைப் பூ" தேசிய விலங்கு "சிறுத்தை" புலம்பெயர் இனிய உறவுகள்  மறந்து விடக் கூடாது என்பதற்காக இதில் பட்டியல் இருக்கிறோம்.  
மூத்த  தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்கும் இடையில் தொடர்புப் பொருளாகத்  தேசியச்  சின்னங்கள் இடம்பெறுகின்றன. தேசியச் சின்னங்களின் சிதைவு தொடர்பின்   சிதைவாக அமைகிறது. தாயகத்திற்கும் புலத்திற்கும் இடையில் நிலவும் உறவை   வலுப்படுத்தும் பாலமாகத் தேசியச் சின்னங்கள் நிலவுகின்றன. 
தமிழீழ  விடுதலைப் போரின் அடிப்படை இலட்சியங்களைத் தாங்கி நிற்கும்  உணர்வும்  உருவமுமாகப் தேசியக் கொடியும் தேசியச் சின்னங்களும்  விளங்குகின்றன.  தேசியக் கொடிக்கும் பிற தேசியச் சின்னங்களும் உரிய மதிப்பு  வழங்குவது எமது  கடமையாகும். 
 
 
1 comment:
அசத்தல் பதிவு..
Post a Comment