Pages

Search This Blog

Thursday, September 29, 2011

கிருஸ்தவர்களின் சந்தோஷத் திருவிழா

கிருஸ்தவர்களின் சந்தோஷத் திருவிழா, இயேசு பிரானின் பிறப்புத் திருநாள் கிருஸ்துமஸ்.

Christmas celebration ஒவவொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படும் கிருஸ்துமஸ் திருநாளின் வரலாறு குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?

கிருஸ்துமஸ் முன்பு இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் விதத்தில் கொண்டாடப்படவில்லை. கி.பி. 300ம் ஆண்டு வரை அது ஒரு ரோம் நகர திருவிழாவாக மட்டுமே இருந்து வந்தது.

போப்பாண்டவராக ஜூலியஸ் என்பவர் பதவி ஏற்ற பின்னர் தான் இயேசுவின் பிறப்பு விழாக் கொண்டாட்டமாக மாறியது.

இயேசுபிரான் அவதரித்த நாள் எது என்பதில் துவக்கத்தில் குழப்பம் இருந்தது. வெவ்வேறு தேதிகளில் இது கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் டிசம்பர் 25ம் தேதிதான் இயேசு அவதரித்தார் என்று கி.பி.336ல் வெளியிடப்பட்ட ரோமன் காலண்டரில் அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்டது.

டிசம்பர் 25 தான் இயேசுவின் பிறந்த தினம் என்பதை ரோமன் கத்தோலிக்கர்களும், புராட்டஸ்டன்ட் பிரிவினரில் பெரும்பான்மையானவர்களும் ஏற்றுக் கொண்டனர்.Jesus

 ஆனால் கிழக்கத்திய ஆர்த்தோடக்ஸ் (ரஷியர்கள்) பிரிவினர் அதை ஏற்க மறுத்து ஜனவரி 6ம் தேதிதான் இயேசு அவதரித்தார் என்று ¬கூறினர். ஜனவரி 6ம் தேதி தான் அவர்கள் கிருஸ்துமஸை இன்று வரை கொண்டாடி வருகிறார்கள்.

இதேபோல ஆர்மீனிய சர்ச் பிரிவினைச் சேர்ந்தவர்கள் ஜனவரி 19ம் தேதியை கிருஸ்துமஸாக கொண்டாடுகிறார்கள்.

ஐரோப்பாவில் கி.பி.1100ல்தான் கிருஸ்துவமஸ் மிகுந்த முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. ஐரோப்பியக் கண்டத்தின் முக்கியத் திருவிழாவாக கிருஸ்துமஸ் மாறியது.

கிருஸ்துவர்களிடையே கருத்துப் பிளவு ஏற்பட்டது. புரோட்டஸ்டன்ட் என்ற பிரிவினர் உருவாகினர். இதனால் இங்கிலாந்தில் 1600ல் கிருஸ்துமஸ் கொண்டாட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. இதுதான் ஆரம்ப கால கிருஸ்துமஸின் சுருக்கமான வரலாறு.

1 comment:

Post a Comment