கோவை அருகே உள்ள துடியலூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரன் தாக்கப் பட்ட சம்பவத்தில் வழக்கறிஞரைத் தாக்கிய காவலரைக் கைது செய்யக் கோரி கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள மாவட்ட எஸ்பி. அலுவலகத்தில் தொடர்ந்து 4வது நாளாக முற்றுகை போராட்டத்தை வழக்கறிஞர்கள் நடத்தி வருகின்றனர்.
வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரனுக்கும் காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலருக்கும் இடையே நடந்த மோதலில் துடியலூர் பெண் எஸ்.ஐ ரேணுகாதேவி உள்பட 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டு விட்டனர்.
ஆனால் தற்போது வழக்கறிஞர்கள், இவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி கடந்த 10ம் தேதி முதல் நீதிமன்றத்தைப் புறக்கணித்து விட்டு எஸ்.பி அலுவலகத்தைத் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் நீதிமன்ற விசாரணைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் காவல்துறையினரும் நீதிமன்றத்திற்குள் செல்லவில்லை.
மேலும் மாவட்ட எஸ்பி அலுவலகம் பூட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் எவரும் மனு கொடுக்கமுடியவில்லை. கோவையில் உள்ள வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக இன்று அவிநாசி, மேட்டுப்பாளையம், பல்லடம், பொள்ளாச்சி உள்ளிடட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வழக்கறிஞர்கள் கோவை எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டம் குறித்து வழக்கறிஞர் சங்கத் தலைவர் நந்த குமார் நமது செய்தியாளரிடம் கூறியதாவது:
"எங்கள் போராட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கறிஞரைத் தாக்கிய காவலரைக் கைது செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் நீடிக்கும். எங்களது நிலையைத் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் வேறு வகையான போராட்டங்கள் நடத்துவது குறித்து கலந்து பேசி முடிவு செய்யப்படும்" என்றார்.
4 comments:
இது காலம் காலமாய் நடக்கும் விஷயம் தானே, அம்மா வந்தாலே காக்கி சட்டை போட்டவர்கள் சட்டத்தி காப்பதை விட்டு விட்டு கையில் எடுத்துக் கொள்வார்கள்...
இன்னும் 5 நாள் SP ஆபீஸ் வாசலில் இருங்கள்
வெற்றி கிட்டும்வரை போராட்டம் தொடரட்டும்
அராஜக நிகழ்வினை பதிவாக்கி
அனைவரும் அறியத் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2
Post a Comment