Pages

Search This Blog

Monday, January 30, 2012

நயன்தாரா ரிட்டன்ஸ்! எடுத்த எடுப்பிலேயே ரூ.1.5 கோடி சம்பளம்!




தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நயன்தாரா. பிரபுதேவாவை திருமணம் செய்ய இருந்ததால், தெலுங்கில் ஸ்ரீராம்ராஜ்யம் படத்தோடு நடிப்பிற்கு முழுக்கு போட்டார். சினிமாவை விட்டு விலகுவதற்கு முன்பு வரை அவருடைய மார்க்கெட் ரேட்டிற்கு எந்த சரிவும் இல்லை. நல்ல நிலையிலேயே அவர் சினிமாவை விட்டு நீங்கினார்.




இந்நிலையில் பிரபுதேவா-நயன்தாரா காதலில் விரிசல் ஏற்பட்டு, இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் நயன்தாரா மீண்டும் நடிக்க ஆரம்பித்து விட்டார். இப்போது தெலுங்கில் நாகர்ஜூனாவுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

அந்த படத்தில் அவருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் ரூ.1.5 கோ‌டியாம். நயன்தாராவின் இந்த சம்பள ரேட்டை கேட்டு முன்னணி நடிகைகள் பலர் வாயடைத்து போய் உள்ளனராம். நடிப்பிற்கு முழுக்கு போட்டு போன நடிகையை திருப்பி அழைத்து வந்து இவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்களே என்று பலர் புலம்பி வருகின்றனர்.

முதல் படத்திற்கே இவ்வளவு என்றால் இனி நடிக்க போகும் படத்திற்கு…?! அப்ப இனிமேல் நயன்தாரா காட்டில் மழை தான்… போங்க!!

1 comment:

Anonymous said...

பேசாம 9ஆ பிறந்திருக்கலாமோ?

Post a Comment