முல்லைப்பெரியாறு அணை விவகாரம் நாளுக்கு நாள் பற்றி எரிந்துகொண்டிருக்கும் நிலையில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் வேட்டை படத்தை கேரளாவில் எப்படி ரிலீஸ் செய்வது பற்றியும், படத்தின் கேரளா ரைட்ஸ் பற்றியும் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி,  குழப்பத்தில் இருந்தபோது,  படத்தின் நாயகன் ஆர்யா,  இது பற்றி இப்போது எந்த முடிவும் எடுக்க வேண்டாம்,  பிரச்சனை முடிந்தபிறகு அது பற்றி யோசிக்கலாம், கேரளா ரைட்ஸ் சம்பந்தமாக இப்போதைக்கு உங்களுக்கு எதாவது பாதிப்பு ஏற்பட்டால் அந்த இழப்பீட்டை ஈடுகட்ட,  என் சம்பளத்தில் கொஞ்சம் திரும்ப கொடுத்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

பொங்கலுக்கு மேலும்  பெரிய படங்கள் வரவிருக்கிறது.   அவர்கள் முடிவு என்னவாக இருக்கும்?