உன்னை பார்த்த முதல் கணமே,
உன் அனுமதியின்றி காதல் செய்தேன் ...
உன் மீன் போன்ற விழிகளால் வலை
விரிக்கப்பட்டு ,வீழ்த்தப்பட்டேன்...
உன்னை காணுவதற்காக என் கால்களை வேலை வாங்கினேன் ...
இமை மூட பயந்தேன் , .
நிமிடங்களை கணக்கிட்டு செலவு செய்தேன்...
உன்னை பார்த்த நிமிடங்களை ,
பொக்கிஷமாய் நெஞ்சில் புதைத்தேன்..
உன்னை காணாத நொடிகளை,
நகர்த்த முயற்சி செய்தேன்...
உன் முன் மௌனமாகும் உதடுகளை விட்டு,
கண்கள் மூலம் காதலை சொல்ல முயன்றேன் ...
என் காதல் உனக்கு புரிந்ததா? இல்லையா?
என்று எண்ணி நித்திரை தொலைத்தேன் ..
நிஜங்களை வெறுத்தேன், கனவுகளை நம்பினேன்..
இப்படி உன்னால் உண்ணாமல் திரிந்தேன்,
உன்னில் உயிராக வாழ ...
உன்னை விட்டு பிரிய போகிறேன்
உன் அனுமதியின்றி கண்ணீருடன் ,
உன் நினைவுகளை உன்னிடம் கடனாக பெற்று..
.காரணம் கேட்காதே ...
இது விதியின் வஞ்சனை,...
3 comments:
நல்லா இருக்கு.
வேண்டுகோள்:
கலர் கலரா இருப்பதால் படிப்பதற்கு சிரமமாக இருக்கு மஞ்சள் கலரில் உள்ள எழுத்துகளை கூர்ந்து படிக்கவேண்டிய நிலை - கொஞ்சம் மாற்றி ஒரே கலரில் கொடுத்தல் நல்லது
காதல் கவிதை நல்லா இருக்கு நண்பரே...
நல்ல கவிதை
Post a Comment