Pages

Search This Blog

Wednesday, February 15, 2012

ரஜினி மகளைக் கட்டிக்கிட்டதால என் அடையாளமே போயிடுச்சி – புலம்புகிறார் தனுஷ்


 

ரஜினி மகளைக் கட்டிக் கொண்டதால், என் சொந்த அடையாளத்தை இழந்துவிட்டேன் என்று புலம்ப ஆரம்பித்துள்ளார் ரஜினியின் மருமகன் என்ற அடையாளத்தோடு பல வாய்ப்புகளைப் பெற்றுள்ள தனுஷ்.சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விருது விழாவில், தனது ‘கொலவெறிடி’ பாடலை நடிகர் அமிதாப் பச்சனுக்கு சமர்ப்பிப்பதாகவும் ரஜினிக்கு தன்னால் இப்படி செய்ய முடியாது என்றும் அறிவித்தார் தனுஷ். அவரது இந்தப் பேச்சு, லேசாக முணுமுணுப்பை கிளப்பியது.
 
நிகழ்ச்சி முடிந்த பின்னர், இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் ரஜினி இருக்க, பிரபலமான ஒரு பாடலை அமிதாப்பச்சனுக்கு சமர்ப்பித்தது ஏன்? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தனுஷ், “குடும்பத்துக்குள் இப்படியெல்லாம் செய்துகொள்ளக் கூடாது. என் மாமனார் மீது எனக்கு மரியாதை உண்டு. அவரது தனிமையை மதிக்கிறேன்.

ஆனால் ரஜினியின் மருமகன் என்பது எனக்கு மிகப்பெரிய சுமையாகத் தெரிகிறது. 2004-ல் அவரது மகள் ஐஸ்வர்யாவை நான் திருமணம் செய்த போதே என் சுய அடையாளத்தை இழந்துவிட்டேன். அதற்கு முன் நான் சம்பாதித்த பேர் புகழ் அனைத்தையும் ரஜினி மருமகன் என்பது அடித்துச் சென்றுவிட்டது. எங்கே போனாலும் என்னை அவரது மருமகனாகத்தான் பார்க்கிறார்கள்.

எப்போது நான் பேட்டி கொடுத்தாலும், என்னிடம் கேட்கப்படும் முதல் கேள்வி, ‘ரஜினியின் மருமகன் என்பதை எப்படி உணர்கிறீர்கள்’ என்பதுதான். முன்பெல்லாம் இந்தக் கேள்வியைத்தான் எடுத்த எடுப்பில் கேட்பார்கள். கொலவெறி பாட்டுக்குப் பிறகு, இந்தக் கேள்வியை இடையில் கேட்கிறார்கள். இனி வரும் நாட்களில் இந்தக் கேள்வியே கேட்கப்படாது என நம்புகிறேன்!” என்றார்

தனுஷின் பேச்சு மிகவும் முரண்பாடானதாகவும், ஏதோ புதிய வெறுப்பில் பேசுவதாகவும் அமைந்துள்ளதாக ரஜினியின் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

“இவ்வளவு பேசும் தனுஷ், சூப்பர் ஸ்டாரின் படிக்காதவன், பொல்லாதவன் தலைப்புகளை எதற்குப் பயன்படுத்தினார்? மாப்பிள்ளை படத்தை எந்த அடிப்படையில் ரீமேக் செய்தார்? என்னம்மா கண்ணு…, என்னோட ராசி நல்ல ராசி பாடல்களை ரீமிக்ஸ் செய்தது எதற்காக? இதையெல்லாம் அவர் ரஜினியின் மருமகனான பிறகே செய்தார்.

ரஜினியின் புகழ் தனக்கு வேண்டாம் என்று உண்மையிலேயே நினைப்பவராக இருந்தால், அவர் இதையெல்லாம் செய்திருக்க வேண்டாமே…
உண்மையில் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்யும் போது தனுஷ் ஒரு ஜீரோ. அவரது எந்தப் படமும் ஓடவில்லை. புதுக்கோட்டையிலிந்து சரவணன், சுள்ளான் என எல்லாம் குப்பைப் படங்கள். மேலும் கால்ஷீட் சொதப்பல் காரணமாக வரிசையாக வழக்குகளைச் சந்தித்து வந்த நேரம் அது.
ரஜினி மருமகன் என்ற அந்தஸ்தை வைத்துதான் இவர் பல சிக்கல்களிலிருந்து வெளியில் வந்தார்,” என்கிறார் ஒரு ரசிகர்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு முக்கிய இயக்குநர் இதுபற்றி கூறுகையில், “ரஜினி ஒரு மாபெரும் சூப்பர் ஸ்டார். அவருக்கு முன் தனுஷ் ஒரு சுள்ளான் என்று கூட சொல்ல முடியாது. சினிமாவில் தான் சொந்த அடையாளத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக ரஜினி பெயரையே யாரும் சொல்லக் கூடாது என்று சொன்னாலும் சொல்வார் போலிருக்கிறது தனுஷ்… கொலைவெறிடி என்ற பாட்டுக்காக இவரை பாலிவுட் கூப்பிடவில்லை. ரஜினி மருமகன் என்ற கூடுதல் தகுதி காரணமாகத்தான்,” என்றார் கொதிப்புடன்.
விடுங்க பாஸ்… இந்த தனுஷ் எப்பவுமே இப்படித்தான்!

1 comment:

தமிழ்நுட்ப்பம் said...

Norton Internet Security 2012 2Years License உடன் இலவசமாக கிடைக்கிறது !

http://tamiltechtips.blogspot.in/2012/02/norton-internet-security-2012-v19113-2.html


Pendriveய் Ramஆக பயன்படுத்தலாம் !

http://tamiltechtips.blogspot.in/2012/02/usb-drive-as-ram-give-your-windows-xp.html


மெமரி Card Data Recovery Software !

http://tamiltechtips.blogspot.in/2012/01/memory-card-data-recovery-software.html

Post a Comment