திருநங்கைகளின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதற்காக இந்திய பாலியல் சுதந்திர கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக பிரபல திருநங்கை ரோஸ் என்கிற வெங்கடேசன் கூறியுள்ளார்.
இப்படிக்கு ரோஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் திருநங்கை ரோஸ். சமீபத்தில் திருநங்கைகளுக்கு சமூகம் எந்தவிதமான அங்கீகாரத்தையும் கொடுக்க மறுக்கிறது, கெளரவமான வேலை கிடைப்பதில்லை. எனவே அவர்களை பாலியல் தொழிலில் சட்டப்பூர்வமாக ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ரோஸ்.
இந்த நிலையில் திருநங்கைகளின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதற்காக புதிய கட்சி தொடங்கப் போவதாக ரோஸ் கூறியுள்ளார். கும்பகோணம் வந்த அவர் அங்கு சிறுந்த முன்னுதாரண விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்பாலியல் சிறுபான்மையினருக்கு சமுதாயத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. அவர்கள் புறக்கணிக்கப்பட்டு மற்றவர்களால் கேலி, கிண்டலுக்கு உள்ளாகி, போக பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றனர். தொன்றுதொட்டு அவர்கள் புறக்கணிக்கப்படுவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பும் இல்லை. உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்தநிலை மாறவேண்டும்.
அவர்களுக்கு பொருளாதாரரீதியில் முன்னேற்றம் இல்லாததே அவர்கள் சில செயல்களில் ஈடுபட நேரிடுகிறது. அதற்கு காரணம் இயற்கைதான்.
மக்கள் பிரதிநிதியாக வெற்றி பெற்று அரசியலில் திருநங்கைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பேன்.சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட ஒரு பெரிய மாநில கட்சியிடம் வாய்ப்பு கேட்டேன். ஆனால் கிடைக்கவில்லை. எனவே விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளேன். இந்திய பாலியல் சுதந்திர கட்சி என்ற பெயரில் இக்கட்சியை செயல்படுத்தவுள்ளேன் என்றார் ரோஸ்.
1 comment:
தொடருங்கள் நண்பரே..
Post a Comment