பாடசாலைகளிலிருந்தே பிரிவினைவாதம் ஆரம்பிக்கப்படுவதாக இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
நாட்டில் பிரிவினைவாதம்
தலைதூக்கியமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை மட்டும் குற்றம்
சுமத்துவது நியாயமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாட்டின்
கல்விமுறைமையிலேயே பிரிவினைவாதம் புறையோடியிருப்பதாகக்
குறிப்பிட்டுள்ளார்.பௌத்தம், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், தமிழ்,
சிங்களம், ஆண், பெண், கலவன் என பல்வேறு வழிகளில் பிரிவினைகள்
ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாத்தன்டிய பிரதேசத்தில் நடைபெற்ற
நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பௌதீக
ரீதியில் கடந்த 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக
தோற்கடிக்கப்பட்ட போதிலும், ஈழக் கோரிக்கை தொடர்பான மனோ நிலையுடையவர்கள்
தொடர்ந்தும் சர்வதேச ரீதியாக இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனோ நிலை தொடரும் வரையில் ஒவ்வொரு
மார்ச் மாதமும் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்
பேரவையின் அமர்வுகளில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுவதாகத்
தெரிவித்துள்ளார்.
1 comment:
நாட்டின் நிலையை நவின்றுள்ளீா்! இன்றமிழ்
ஏட்டின் இனிமை இசைத்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு
Post a Comment