Pages

Search This Blog

Thursday, May 23, 2013

என்.எல்.சி. பங்குகளை விற்கக் கூடாது:

 


நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) பங்குகளை விற்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வியாழக்கிழமை அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

1957-ஆம் ஆண்டு, பிணையங்கள், ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) விதிகளின் கீழ் திருத்தியமைக்கப்பட்டவாறு, நெய்வேலி நிறுவனத்தில் தான் வைத்துள்ள சமவீத பங்குகளில் 5 சதவீதத்தை மத்திய அரசு திரும்பப் பெற கருதியிருப்பதாக நான் அறிகிறேன்.

 
 நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் எந்தவொரு பகுதியும் தனியார்மயமாக்கப்படுவதை என்னுடைய அரசு தொடர்ந்து வலுவாக மறுத்து வருகிறது.  சமவீத பங்குத் தொகையை குறைக்காமல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை ஒரு பொதுத்துறை நிறுவனமாக பராமரிக்க வேண்டும் என்பதே எங்களுடைய உறுதியான கருத்தாகும்.

1957-ஆம் ஆண்டு பிணையங்கள், ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) விதிகளில் அண்மைக்காலத்தில் செய்யப்பட்டுள்ள சில திருத்தங்களின் அடிப்படையில், மத்திய அரசு செயற்கையான ஒழுங்குமுறை இடர்ப்பாடுகளை உருவாக்க முயற்சிப்பதாக அறிகிறேன். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், மத்திய அரசு தான் வைத்திருக்கும் சமவீத பங்குத் தொகையை குறைப்பதற்கு இந்த விதிகளின் அடிப்படையில் மேற்கோள் காட்டுவது, பொருத்தமாகவோ அல்லது விரும்பத்தக்கதாகவோ இல்லை.

தொழிலாளர்களிடையே கொந்தளிப்பு:  பங்குகளின் ஒரு சிறு பகுதியைக்கூட திரும்பப் பெறக் கருதினால், அதன் விளைவாக தொழிலாளர்களிடையே பெருமளவில் கொந்தளிப்பு ஏற்படும்.  நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திலிருந்து கிடைக்கிற மின்சக்தியில் ஏதேனும் தடை ஏற்படுமாயின், அது மாநிலத்தின் நலனை கடுமையாக பாதிக்கும்.

தற்போது பொதுமக்களிடம் உள்ள 6.44 சதவீதப் பங்குகளை மீண்டும் வாங்குவதன் மூலம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமானது பொதுத் துறை நிறுவனப் பட்டியலிலிருந்து நீக்கப்படலாம். இந்த நிலை ஏற்படாமல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு சிறப்பு விதிவிலக்கு அளிக்கிற வகையில், 1957- ஆம் ஆண்டு பிணையங்கள் ஒப்பந்தங்கள் (முறைப்படுத்தல்) விதிகளில் திருத்தம் கொண்டு வரப்படலாம்.

இந்தச் சூழ்நிலைகளில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் மத்திய அரசு வைத்துள்ள பங்குகள் மேற்கொண்டும் திரும்பப் பெறப்படாமலிருப்பதை அல்லது பங்குகளின் மதிப்பு படிப்படியாகக் குறைக்கப்படாமலிருப்பதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment