Pages

Search This Blog

Tuesday, October 29, 2013

கரப்பான்பூச்சியை இனி அடிச்சு கொல்லாதீங்க!

 


 
 
ஒரு கரப்பான் விடாம அடிச்சி கொல்லுங்க... என்று இந்தியாவில் விளம்பரம் செய்கின்றனர். அந்த அளவிற்கு கரப்பான் பூச்சி என்றாலே அச்சமும் அருவெறுப்பும் உள்ளது நம்மவர்களிடம். 

 ஆனால் அண்டை நாடான சீனாவிலோ கராப்பான் பூச்சியை பொறித்து சாப்பிடுகின்றனர். கரப்பான் பூச்சி பண்ணை வைத்து வளர்ப்பவர்கள் கோடி கோடியாய் சம்பாதிக்கின்றனர்.
 
 உணவுக்குப் பயன்படுவதோடு மருந்துப் பொருளாகவும், அழகுசாதனப்பொருளாகவும் கரப்பான் பூச்சி பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே கரப்பான் பூச்சிக்கு சீனாவில் வரவேற்பு அதிகரித்துள்ளது. நம் ஊரில் வெறுத்து ஒதுக்கப்படும் கரப்பான்பூச்சியிடம் அப்படி என்னதான் இருக்கிறது மேற்கொண்டு படியுங்களேன். 

1.பூச்சிகளை சாப்பிடுறாங்க நாம் அடித்துக் கொல்லும் கரப்பான் பூச்சிகளையும், வெட்டுக்கிளிகளையும் பொறித்து, வறுத்து சாப்பிடுகின்றனர் சீனர்கள். அதேபோல தென்ஆப்பிரிக்கா, தென்அமெரிக்காவில் உள்ள மக்கள் கம்பளிப்புழு, வண்டு, தேள், குளவி போன்ற பூச்சி, புழுக்களை விரும்பி சாப்பிடுகின்றனர்.

2.கோடிக்கணக்கில் வருமானம் சீனாவில் மட்டும் நூற்றுக்கணக்கான கரப்பான் பூச்சி பண்ணைகள் இருக்கின்றன. ஒருகிலோ உலர்ந்த கரப்பான்பூச்சியின் விலை ரூ.2400. 61 ரூபாய் முதலீட்டில் 670 ரூபாய் லாபம் பார்க்கலாம் என்கின்றனர்.

3.விளம்பரம் நம்ஊரில் நாட்டுக்கோழி வளர்ப்பு, ஈமு கோழி வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு விளம்பரம் போல சீன டிவிகளில் கரப்பான்பூச்சி வளர்ப்பு பற்றிய விளம்பரங்கள் பிரபலமாக உள்ளனவாம். இனி நம் வீட்டிலும் கரப்பான் பூச்சிகளை கொஞ்சம் கருணையோடு பாருங்களேன்!

4.முடி வளரும் வழுக்கைத் தலையில் முடிவளர பல விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் சீனாவில் லீ ஷீவான் என்ற 78 வயது சீன வைத்தியர், கரப்பான் பூச்சிகளை அரைத்து, தன் வழுக்கைத் தலையில் தினமும் தேய்த்துக் கொண்டதால், முடி வளர்ந்ததாக கூறியுள்ளார். முகம் பளபளப்பாக கரப்பான் பூச்சியை அரைத்து பூசலாம் என்கின்றனர்.
 
5.எய்ட்ஸ்-புற்றுநோய் கரப்பான் பூச்சிகள் அணுக்கதிர் வீச்சையும் கூட தாங்கும் தன்மை கொண்டவையாம். இவற்றின் மூலம் எய்ட்ஸ், புற்றுநோய் போன்றவைகளுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

6.உயிர்காக்கும் மருத்துவம் கரப்பான் பூச்சியின் மூளைப் பகுதியிலிருந்து பெறப்படும் சிற்றளவிலான வேதிக் கூறுகள் நுண்ணுயிரிகளைக் கொல்வதில் 90% சக்தி கொண்டவையாக உளவாம். முதலில் இன்னும் விரிவான ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். பின் மருந்துவகைகள் ஆக்கப்பட வேண்டும். அதன் பிறகுதான் மருந்து சந்தைக்கு வரும்.

7.உயிர் காக்கும் கரப்பான் பூச்சியும் வெட்டுக்கிளியும் மனிதரின் உயிர் காக்கும் மருத்துவர்களாக மாறும் நாள் தொலையில் இல்லை என இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்கம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சைமன் லீ என்பவரின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கரப்பான் பூச்சி மட்டுமில்லை... எந்த உயிரையும் கொல்லக் கூடாது... விளக்கங்களுக்கு நன்றி...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஒரு சீனர் சொன்னார் "நாங்கள் ஊர்வனவற்றில் ரெயினை விட்டு, பறப்பனவற்றில் பிளேனை விட எல்லாவற்றையும் உண்போம்"
அதனால் இந்த கரப்பான் பூச்சி விடயம் ஆச்சரியம் தரவில்லை.
"கரப்பான் பூச்சி மட்டுமில்லை... எந்த உயிரையும் கொல்லக் கூடாது... "
தனபாலண்ணா! இவை இன்றைய உலகில் நடைமுறைப் படுத்தக் கூடிய விடயமல்ல.
மனிதனையே மனிதன் விட்டா வைக்கிறான்.இப்போ ஏனைய உயிர்கள் எம் மாத்திரம்.
நாளைக்கு பசு மாட்டு ஈரல் உண்டால் புற்று நோய் தீருமென்றால், சங்கராச்சாரிக்கு புற்று வந்தாலே திருட்டுத்தனமா பசுமாட்டு ஈரலை உண்டு விடுவார்.
அந்த அளவு வாழும் ஆசை , எப்படியாவது பிழைத்து விடவேண்டுமெனும் ஆசை எல்லோரையும் வாட்டுகிறது. இது தான் உண்மை.

Unknown said...

super

Post a Comment