Pages

Search This Blog

Saturday, July 30, 2011

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பி¡¢யாணி

தேவையானவை:

பி¡¢யாணி அ¡¢சி  : 1 டம்ளர்
பீன்ஸ், கேரட், காலி·பிளவர், பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு, நூல்கோல் எல்லாம் சேர்த்து நறுக்கிய துண்டங்கள் : 3 டம்ளர்,
நெய : 2 டேபிள் ஸ்பூன்,
பொ¢ய வெங்காயம் : 2
முந்தி¡¢ப் பருப்பு : 20
கிராம்பு : 6
லவங்கப்பட்டை : 6
ஏலக்காய : 6
வெள்ளைப் பூண்டு உ¡¢த்தது : 10 பல்லு
பொ¢ய தேங்காய : 1/2 மூடி
உப்பு : 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் : 2

செய்முறை:

முதலில் காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி திட்டமாகத் தண்ணீர் வைத்து வேகவைத்துக்கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக்கொள்ள வேண்டும். கிராம்பு, பட்டை, ஏலக்காய் முதலியவைகளை அம்மியில் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். கனமான வெங்கல உருளி அல்லது ஈயம் பூசிய பித்தளைப் பாத்திரத்தில் நெய்யை வைத்துக் காய்ந்தவுடன், முந்தி¡¢ப் பருப்பையும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு முதலியவைகளையும் போட்டுச் சிவப்பாக வறுபட்ட உடன் அம்மியில் வைத்துத் தட்டிய பொடியையும் போட்டு தேங்காய்ப் பாலும் தண்ணீருமாகச் சேர்த்து 2 1/2 டம்ளர் விட்டு, கொதிக்கும்பொழுது அ¡¢சியைக் கழுவிப் போட வேண்டும். தீயைக் குறைத்து நிதானமாக எ¡¢யவிட வேண்டும்.

அ¡¢சி நன்றாக வெந்த பிறகு உப்பு, வெந்த காய்கறிகளையெல்லாம் போட்டுக் கிளறி இறக்கி வைக்க வேண்டும். இதற்கு வேண்டிய அளவு வெங்காயத் தயிர் பச்சடி செய்து சாப்பிடலாம்.

No comments:

Post a Comment