இரு நாடுகளிடையேயான உறவு மேம்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் ஆட்டத்தின் இடையே கிலானிக்கு மன்மோகன்சிங் விருந்து அளித்தார். அப்போது இருவரும் பேசியது குறித்து வெளியுறவு செயலர் நிருபமாராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இரு நாடுகள் இடையேயான உறவு மேம்படுவதற்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியமானது என்பதை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். அதன் மூலம் உறவு மேம்பட வேண்டும் என்று இருவரும் விருப்பம் தெரிவித்தனர். இதன் மூலம் மும்பை தாக்குதலை இந்தியா மறந்து விட்டது என்று கூற முடியாது. வன்முறையற்ற சூழலில்தான் உறவு மேம்பட முடியும் என்பதை மன்மோகன்சிங் சுட்டிக் காட்டினார். அதை கிலானியும் ஒப்புக் கொண்டார்.
மும்பை தாக்குதல் குறித்து புது டெல்லியில் நடைபெற்ற உள்துறை செயலர்கள் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. குற்றம் இழைத்தவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பழைய பகைகளை பின்னுக்கு தள்ளி இப்போதுள்ள பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும் என்று மன்மோகன்சிங் கூறினார். அதற்கான மன உறுதியும் இரு நாடுகளுக்கும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளின் வர்த்தக செயலர்கள் அடுத்த மாதம் சந்திக்கவுள்ளனர்.
பாகிஸ்தான் வெளியுறவு செயலர் சல்மான் பஷீரை ஓரிரு மாதங்களில் நான் சந்திக்க உள்ளேன். அதன் பின்னர் வெளியுறவு செயலர்கள் கூட்டம் நடைபெறும். பாகிஸ்தானுக்கு வருமாறு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கிலானி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

3 comments:
மாப்ள உங்க பகிர்வுக்கு நன்றி...கொஞ்சம் உங்க டேம்ப்லடே கவனிக்கவும்......இரு பக்கமும் பச்சையாக இருப்பதால் எழுத்துக்கள் சரியா தெரியவில்லை!
அருமையான பதிவு, எழுத்துக்கள் பச்சை நிறத்தில் இருப்பதால் வாசிப்பு தாமதிக்கின்றது, பரிசீலனை செய்யுங்கள் நண்பா!
தல உங்க டேம்ப்லடே கொஞ்சம் சங்கே பண்ணுங்க ஒண்ணுமே படிக்க முடியலை............
Post a Comment