Pages

Search This Blog

Thursday, August 04, 2011

இலங்கைத் தமிழர்கள் நிலையை நேரில் பார்வையிடுவேன்! - சுஷ்மா சுவராஜ்


இலங்கை அதிபர் இந்தியாவுக்கு வந்தபோது இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு பணிகள் துரிதமாகவும், சிறப்பாகவும் நடப்பதாக கூறினார். நான் வருகிற செப்டம்பர் மாதம் இலங்கை செல்ல உள்ளேன். அப்போது தமிழர்களின் நிலையை நேரில் பார்வையிடுவேன்’’ என்று இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார்.
பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை மைலாப்பூரில் கடந்த 2 நாட்கள் நடந்தது. நேற்றைய கூட்டத்தில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில்,
தமிழகத்தில் ஆளுங் கட்சியை வீழ்த்த எதிர்க் கட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள். எனவே இந்த தேர்தல் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே என்றாகி விட்டது. இதை மாற்ற பாரதீய ஜனதா மக்கள் பிரச்சினையை கையில் எடுத்து தொடர்ந்து போராடும்.
உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது தொடர்பான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவது பற்றி பாராளுமன்றத்தில் பேசினேன். இவ்வாறு தொடர்ந்து நடக்கும் தாக்குதல் வருந்தத்தக்கது. வரும் பாராளுமன்ற கூட்டத்திலும் இதுகுறித்து பேசுவேன்.
இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு வந்த போது இலங்கை தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு கௌரவமான வாழ்க்கை கிடைக்க வேண்டும். மறுவாழ்வு பணிகள் துரிதமாக நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
அதற்கு பதில் அளித்த இலங்கை அதிபர் எல்லா பணிகளும் சிறப்பாக நடப்பதாக கூறினார். நான் வருகிற செப்டம்பர் மாதம் இலங்கை செல்ல உள்ளேன். அப்போது தமிழர்களின் நிலையை நேரில் பார்வையிடுவேன்’’ என்று கூறினார்.

No comments:

Post a Comment