Pages

Search This Blog

Sunday, November 13, 2011

நடிகை த்ரிஷா, இதுவரை தான் சொல்லாத விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா, இதுவரை தான் சொல்லாத விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.நிஜ/சினிமா பெயர்: த்ரிஷா
பிறந்தது: சென்னை
படிப்பு முடித்தது: எல்‌.கே.ஜி – பிளஸ்-2 : சர்ச் பார்க் பள்ளி, பி.பி.எம்., எத்திராஜ் கல்லூரி

முதல்படம்: ஒப்பந்தமானது ப்ரியதர்ஷன் படம். ஆனால் வெளிவந்தது மெளனம் பேசியதே(1999), தெலுங்கில் வர்ஷம்
முதல் படம் வெளியூர் சூட்டிங்: விக்ரமுடன் சாமி படத்தின் போது ‌நியூசிலாந்து சென்றது.
மறக்கமுடியாத நபர்: டயானா(இன்றும் அவரின் படங்களை பைல் பண்ணி வச்சிருக்கேன்)
அதிகமுறை பார்த்த படம்: ஆங்கில படங்கள், பெரிய லிஸ்ட்டே இருக்கு
அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை: ஓ காட்
பிடித்த உணவு: அம்மா சமைக்கும் ப்ரியாணி
தவிர்க்க விரும்புவது: ஸ்வீட்ஸ்
முதல் காதல் அனுபவம்: நான் மிஸ் சென்னை பட்டம் பெற்ற போது, யாரோ ஒரு நபர் என் வீட்டுக்கு லவ் லெட்டர் அனுப்பியது.
சந்திக்க விரும்பும் நபர்: தெரஸா, டயானாவை சந்திக்க விரும்பினேன். முடியவில்லை. இப்போது ஒபாமாவை சந்திக்க விரும்புகிறேன்.
போக விரும்பிய வேலை: ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ., படித்துவிட்டு பெரிய கம்பெனியில் வேலைக்கு சேர நினைத்தேன்.
பிடித்த கலர்/உடை: பிங்க், ஜீன்ஸ்-டிசர்ட்
எதைப்பார்த்தால் பொறாமை வரும்: அழகா பாடுறவங்கள, குறிப்பா ஸ்ரேயா கோஷலை பார்த்தால்.
பயப்படும் ஒரே விஷயம்: எதுக்கும் பயம் இல்‌லாத தைரியசாலி நான்.
வெளிப்படையாக பேசி, மற்றவர்களிடம் மாட்டிக்கொண்ட அனுபவம்: மிஸ் சென்னை பட்டம் பெற்றபோது, ஒரு இன்டர்வியூவில் யூகி சேதுவிடம், சினிமாவிற்கு வரமாட்டேன் என்று பேசி மாட்டிக் கொண்டது.
அடிக்கடி ஞாபகத்துக்கு வர்ற விஷயம்: எல்.கே.ஜி.,யில் இருந்து பிளஸ்-2 வரை நான் படித்த சர்ச் பார்க் ஸ்கூல் நாட்களை என்னால் மறக்கவே முடியாது. கிட்டத்தட்ட என்னோட வீடு மாதிரி உணர்வேன்.
எந்த விஷயத்தில் அதிக ஆசை: சாக்லெட் ரொம்ப பிடிக்கும்
வீட்டில் அதிகம் சேர்த்து வைத்திருப்பது: ஷீ, பேக், பொம்மைகள், எனக்கு கொடுத்த பரிசுப்பொருட்கள், நிறைய கார்ட்ஸ் வச்சுருக்கேன்.
நன்றி சொல்ல விரும்புவது : எந்த சினிமா பின்னணியும் இல்லாம, என்னை சினிமாவில் நடிக்க அனுமதித்த அப்பா, அம்மா.
சுட்டு போட்டாலும் வரவே வராதுனு நினைக்கிற விஷயம்: தையல் ஒர்க், ஸ்கூலில் கிராப்ட் ப்ரியட் இருக்கும், அப்போ தையல் கத்து கொடுப்பாங்க, சுத்தமா வராம நிறைய ‌முறை மிஸ்கிட்ட பயங்கரமா திட்டு வாங்கியிருக்கேன்.
உணர்ச்சிவசப்பட்டால்: அழுதிடுவேன். 8-9 வருஷம் நான் வளர்த்த நாய் இறந்து பல மாதங்கள் ஆகியும், அதிலிருந்து வெளியில வர முடியல.
கிடைச்ச பாப்புலாரிட்டியை வைத்து உருப்படியா செய்ய நினைப்பது: இப்போதும், கேன்ஸர் இன்ஸ்டியூட், அனாதை இல்லங்கள் போயிட்டுதான் இருக்கேன். எதிர்காலத்தில் இன்னும் நிறைய உதவி செய்ய இருக்கேன்.
உங்க ப்ளஸ்: என் நம்பிக்கை
உங்க மைனஸ்: சின்னபுள்ளத் தனமான அசட்டுப் பிடிவாதம் பிடிப்பது.
ரொம்ப அலர்ஜி: எதுமே இல்லை
பிடிவாதம்: முன்னாடி எல்லாம் அம்மாகிட்ட எதுக்கு எடுத்தாலும் பிடிவாதம் பிடிப்பேன். ஆனா, இப்ப அந்த மாதிரி எதுவும் இல்லை. கொஞ்சம் மெச்சூர்டா இருக்கேன்.
மறக்க முடியாத நாள், வருஷம்: மிஸ் சென்னை – 1999, சாமி படம் ரிலீஸ் – மே 2003, தெலுங்கில் வருஷம் படம் ரிலீஸ் – 2004.

No comments:

Post a Comment