Pages

Search This Blog

Saturday, November 12, 2011

சென்னை தமிழில் திருவிளையாடல்





எனது கற்பனையையும் திருவிளையாடல் படத்தில் இருந்து சில பல சீன்களை சுட்டு வரைந்துள்ளதே சென்னை தமிழில் திருவிளையாடல்.. இதில் முழுக்க முழுக்க என்னால் இயன்ற வரை சென்னை தமிழே உரையாடல்களில் பிரயோகிக்கப் படும்.. ஆபாசம் எனது மூளைக்கு எட்டியவரை சிறிதளவும் இருக்காது..

சிவ சபையில்

நாரதர் - (ஈஸ்வரனை நோக்கி) இன்னா, தல எப்டிக்கிற??

சிவன் - நான் நல்லாக்குரம்பா!! ஆனா இன்னா, மன்ஷங்க அவங்களுக்குல்லாரையே அச்சிக்கிரத நென்ச்சா தான் சம காண்டாக்குது..  அப்றோம், ஒன்னோட கலாய் வேலலாம் எப்டி போய்க்கினுக்குது??

நாரதர் - இன்னா தல நம்மாண்ட இப்டி கேட்டுக்குன?? நல்துகோசம் பண்றத அல்லாம் கலாய்னு நென்ச்சிகினா நாம இன்னா பண்றது சொல்லு??  இப்போ நல்து செய்ய எவனும் சிக்கலன்றது தான் கடுப்பாகுது!!

பார்வதி -("காண்டா" அதாவது கோபமா) எவனும் சிக்கலன்றதுகாட்டியுந்தான் நாத்தி இங்க வந்துட்டுக்குராறு போல.. யோவ் நாத்தி இந்த கலாய் வேலலாம் வேற யாரண்டையாவது வச்சிக்கோ, புர்தா??.. நம்மாண்ட வச்சிக்கின "சும்மா பங்கு சீனாய்டும்"..

நாரதர் - எம்மோவ், உன்னான்டலாம் வச்சிக்கிவனா நானு, சொல்லு??

சிவன்- சர்சரி, இன்னா மேட்ரா வந்துக்குற??

நாரதர்- என்னாண்ட ஒரு நானப் பயம் (ஞானப் பழம்)  கெச்சிக்கிது, அத்த ஒன்னாண்ட குத்துட்டு போலான்னு வந்துக்குறேன்..

சிவன்- கண்டுக்குனியா?? நாத்தி கலாய் வேலைய நானப் பயத்தோட ஸ்டார்ட் பண்ணுது.. சரி குத்துட்டு கெளம்பு காத்து வரட்டும்..

பிள்ளையாரும், முருகரும் - நைனா, ஆத்தா, ஆத்தா, நைனா, நைனா, ஆத்தா, ஆத்தா, நைனா.. ("சிவாஜி" மன்னிக்கவும், சிவன் பார்வதி உட்கார்ந்திருக்கும் இடத்தை நோக்கி படிகளில் ஏறி தாய் தந்தையரை கூப்பிட்ட படியே ஓடி செல்கின்றனர்)

பார்வதி-  கொட்ச்சலு குடுக்காம சும்மா குந்துங்க..

முருகர் - உன் கய்த்துலக்குற (கழுத்தில்) பாம்பு என்னியே மொர்ச்சிக்கினுக்குது நைனா.. எனக்கு மெர்சலாருக்குது நைனா..

பிள்ளையார் - டேய் தம்பே, நீ எதுக்கு நைனா கய்த்துல சுத்தினுக்குற பாம்ப பாத்து மெர்சலாவுற?? நாந்தான் அப்பாவாண்ட ஒக்கார போறேன்.. நம்ம பக்தன் முனி கும்ட்டுக்குனுக்குற "நம்ம பேமிலி போட்டாவ பாரு".. (உடனே சிவ குடும்ப படத்தை "முனி" கும்புடுகிற காட்சி எல்லோரும் முன் தோன்றுகிறது)

முருகர்- ஆமாண்டா தடியா..

பிள்ளையார்- டேய் என்ன "டா" போட்டு கூப்டாதன்னு உன்னாண்ட எத்தன தாட்டி சொல்லிக்கிறேன்..

நாரதர் - இவுரு தடியான்னு சொன்னதுக்கு காண்டாவுலையாம்.. "டா" ன்னு சொன்னது இவுருக்கு பெர்சா பூட்ச்சி.. (முருகர் நக்கலா சிரிக்கிறாரு, பிள்ளையாருக்கு இன்னும் சூடாவுது)

பிள்ளையார்- யோவ் நாத்தி சப்ப சோறு.. இன்னா சும்மா இருந்தா சப்பனு நென்ச்சினுக்குரியா?? , நான் சிரிச்சிக்கிற்றுக்கும்போதே ஓடி புடு.. இல்ல கண்டம் ஆயி வேர்க்கடலைய சப்பி சாப்டுவ.. டேய் முருகா, நீ கண்டி இன்னொரு தாட்டி "டா" போட்டு கூப்ட்டு பாரேன் "டாங்கு டிங்காயி, டங்கு டனாராயிடும்"..

முருகர்- டேய் போடா டொம்ம.. "உனக்கு காது கபா கபா ன்னும்"..

(நாரதரால் இரண்டு பேருக்கிடையில் வாக்குவாதம் முத்தி எதிர்பாரதவிதமாக சண்டைக்கு தயாராகிறார்கள்.. இதைப் பார்ர்த்துக் கொண்டிருந்த நந்தி நாரதரை பார்த்து "இதெல்லாம் ஒருப் பொயப்பு" என்று சலித்துக் கொள்கிறது)

5 comments:

சக்தி கல்வி மையம் said...

சூப்பர்..

யாருக்கும் பயப்படாதவன்... said...

மிகவும் பழைய பதிவு
இதுவும் திருட்டு பதிவு

யாருக்கும் பயப்படாதவன்... said...

http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/18353-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/

யாருக்கும் பயப்படாதவன்... said...

http://www.eegarai.net/t53408p10-topic?theme_id=13

யாருக்கும் பயப்படாதவன்... said...

http://www.uyirvani.com/forums/index.php/topic/87045-chennai-tamil-

Post a Comment