தமிழில் படம் ஒப்புக்கொள்ளவில்லையே என்கிறார்கள். மற்ற மொழி படங்களில் நடித்து வருகிறேன். தமிழில் நல்ல வேடத்துக்காக காத்திருக்கிறேன் என ரீமா சென் தெரிவித்தார் . மேலும் அவர்
நான் நடித்த தமிழ் படங்கள் பெரும்பாலும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட். ‘ஆயிரத்தில் ஒருவன் ‘படமும் எனக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. ‘யுகானிக்கி ஒகடு ‘என்ற பெயரில் தெலுங்கில் இப்படம் டப்பிங் செய்யப்பட்டது.
‘சித்ரம்’ என்ற படத்தில் நடித்தபோது எனக்கு நடிப்பு பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் தமிழில் எனக்கு அடுத்தடுத்து படங்கள் கிடைத்தது.
குறிப்பாக தென்னிந்திய படங்கள்தான் நடிப்பை கற்றுக் கொடுத்தன.
எந்த மொழிப் படமாக இருந்தாலும் கலாசாரத்துக்கு விரோதமாக நடித்ததில்லை.
எந்த மொழிப் படமாக இருந்தாலும் கலாசாரத்துக்கு விரோதமாக நடித்ததில்லை.
வங்காள மொழியில் நடித்த படம் ஒன்று விருதுகளை வென்றது. அந்த படத்தை மொழி மாற்றம் என்ற பெயரில் தமிழில் ரிலீஸ் செய்து ஆபாச படம்போல் சித்தரித்திருந்தார்கள். அதுபற்றி அறிந்து வேதனை அடைந்தேன்.
1 comment:
ஒ, அப்படியா சேதி..
Post a Comment