Pages

Search This Blog

Saturday, January 21, 2012

ஐஸ்வர்யா தனுஷ் படத்தில் அபிஷேக் பச்சன்! புதிய தகவல்!!



நடிகர் தனுஷின் மனைவியும், விரைவில் ரீலிஸ் ஆகவிருக்கும் 3 படத்தின் இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் பாலிவுட் படத்தின் ஹீரோவாக நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

3 படத்தில் இடம்பெற்றிருக்கும் கொலவெறிடி பாடல் உள்ளூர் தமிழர்களை உசுப்பேற்றி விட்டதைவிட பல மடங்கு மும்பை வட்டாரத்திலும், வெளிநாடுகளிலும் பிரபலமாகியிருக்கிறது. 3 படம் இன்னமும் ரீலிஸ் ஆகாத நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா தனுஷை மும்பைக்கு வரவழைத்த அபிஷேக் பச்சன், 3 படத்தின் கதையை கேட்டாராம்.

அதோடு, அந்த படத்தினை இந்தியில் ரீமேக் செய்யும்படி ஐஸ்வர்யாவிடம் கேட்டுக் கொண்டதுடன், முக்கியமான ஒரு கண்டிஷனையும் போட்டிருக்கிறார் அபிஷேக். அதென்ன கண்டிஷன்? இந்தியில் உருவாகும் 3 படத்தில் கண்டிப்பாக கொலவெறிடி பாடல் இடம்பெற வேண்டும் என்பதுதானாம். தமிழில் 3 படம் ரீலிஸ் ஆன பின்னர் பாலிவுட் 3 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம்.

1 comment:

MaduraiGovindaraj said...

பணம் இருக்கு படம் எடுக்குறாங்க நாம?

Post a Comment