Pages

Search This Blog

Thursday, January 12, 2012

கோச்சடையானில் ரஜினி ஜோடி கத்ரீனா கைஃப்!


கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை கத்ரீனா கைஃப் நடிக்கிறார்.

இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார் படத்தின் இயக்குநர் சௌந்தர்யா. கூடவே, பிப்ரவரி கடைசி வாரத்திலிருந்து இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்பதையும் அவர் அறிவித்துள்ளார்.

கோச்சடையானில் ஹீரோயின் என்று பல நடிகைகளின் பெயர்களை யூக அடிப்படையில் வெளியிட்டு வந்தது மீடியா. முதலில் அனுஷ்கா, அடுத்து தீபிகா படுகோன், கடைசியாக வித்யா பாலன் என பலரையும் ரஜினிக்கு ஜோடியாக்கிப் பார்த்துவிட்டார்கள்.

இப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் படத்தின் இயக்குநர் சௌந்தர்யா ரஜினி.

அவர் இதுகுறித்துக் கூறுகையில், "கோச்சடையான் ஹீரோயினாக கத்ரீனா கைஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரைச் சந்தித்து இந்தப் படம் குறித்து பேசினேன். ரஜினி படத்தில் நடிப்பதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்தப் படத்துக்காக தன பிஸி ஷெட்யூலை அட்ஜஸ்ட் செய்து தருகிறார். இன்னொரு முக்கிய வேடத்தில் சினேகா நடிக்கிறார்," என்றார்.

பிப்ரவரி 2வது வாரத்தில் கோச்சடையான் படப்பிடிப்பு தொடங்குகிறது!

4 comments:

Unknown said...

சூப்பர் ஸ்டார் சூப்பர்

Anonymous said...

ரசிகர் போல...

சேகர் said...

அப்ப இனொரு ஷீலா கி ஜவாணி ...

திண்டுக்கல் தனபாலன் said...

தலைவர் எப்ப நடிக்க வருகிறார்? தகவலுக்கு நன்றி நண்பரே! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! அன்புடன் அழைக்கிறேன் :
"பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"

Post a Comment