Pages

Search This Blog

Tuesday, October 09, 2012

பொறுமையுள்ளவன் மந்திரியாவான்.


பொறுமையும், நிதானமும் ஆன்மாவின் குணங்கள். உழைப்பாளி சம்பாதித்தால், பொறுமையான உழைப்பாளி அதிகமாக சம்பாதிப்பான். அறிவுள்ளவன் IASபாஸ் செய்தால், அத்துடன் பொறுமையுள்ளவன் மந்திரியாவான்
 
எந்த காரியத்தை முடிக்கவும் ஒரு திறமை வேண்டும்

அதை சிறப்பாக முடிக்க திறமையுடன் பொறுமையும் வேண்டும்.

       வேட்டைக்காரன் பதுங்கியிருந்து வேட்டையாடுகிறான். மீன் பிடிப்பவன் மீன்தானாக வந்து தூண்டிலில் விழும் வரை பொறுமையாக இருக்க வேண்டும் வக்கீல் பொறுமையாக கட்சிக்காரன் சொல்வதைக் கேட்டுக் கொள்ளாவிட்டால், கேஸ் வீணாகும். வக்கீல்கள் பேசுவதை கேட்டுக் கொள்ளும் பொறுமை ஜட்ஜ்களுக்கு இருப்பதில்லை. பொறுமையை இழப்பவர் ஆசிரியராக இருக்க முடியாது. குரு மனம் வந்து சொல்லிக் கொடுக்கும் வரை சிஷ்யனுக்குப் பொறுமை வேண்டும். தக்க சிஷ்யனுக்காக குரு காத்திருக்கிறார்

 பொறுமை எப்படி எழுகிறது 

1. விபரம் தெரிந்தால் பொறுமை உற்பத்தியாகும்

2. அனுபவம் பொறுமையைத் தரும்

3 உஷாராக இருப்பது பொறுமையைப் பெற உதவும்

4. மனம் உறமாக இருந்து, உடல் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியுமானால், பொறுமை வரும்

5. சமத்துவம் (equality)யை உற்பத்தி செய்ய முயன்றால் முன் நிலையில் பொறுமை எழும்

பொறுமையை பூரணமாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இதை மற்ற கோணங்களினின்று ஆராய்வது பலன் தரும். குறை கூறுதல், எதிர்பார்த்தல், ஏமாற்றம், திறமை, சக்தி (force) அசைவு, சக்தி (energy) பசி, அக்கறை, கட்டுக்கடங்காத உணர்வு, புத்திசாலித்தனம், வன்மம், பழிவாங்க நினைப்பது, சாதனை, மனம் விட்டுப் பேசுவது, கற்பனை, படபடப்பு, அகங்காரம் என பல்வேறு கோணங்களில் பொறுமையைக் கருதினால் பொறுமை பூரணமாய் புரியும்.  காலத்தை கடந்த நிலையிலுள்ள மனப்பான்மை பொறுமை.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான குணங்களில் பொறுமையும் மிகவும் முக்கியம்...

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி... பாராட்டுக்கள்...

Unknown said...

பொறுத்தார் பூமியாழ்வார்

Post a Comment