Pages

Search This Blog

Monday, December 31, 2012

பெண்கள் போன் செய்தால் போதும்:"கவனிக்க' அடியாட்களை அனுப்புகிறது

டில்லியில் மருத்துவ மாணவி, பாலியல் பலாத்காரத்தில் கொல்லப்பட்டதை அடுத்து, பெண்கள் பாதுகாப்பிற்காக, சிவசேனா இளைஞர் அணி, பெண்களுக்கான, "ஹெல்ப் லைன்' துவக்கியுள்ளது. மறைந்த பால் தாக்கரே உருவாக்கிய சிவசேனா கட்சி, சில ஆண்டுகளுக்கு முன் வரை, காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அந்த தினத்தன்று, இளம் ஜோடிகளை அடித்து விரட்டிய அந்த கட்சி, இப்போது, பெண்களின் பாதுகாவலர்களாக மாறியுள்ளது.

பால் தாக்கரேயின் பேரன், ஆதித்ய தாக்கரே தலைமையிலான, "சிவசேனா யுவ சேனா' அமைப்பு, மும்பை பெண்களுக்கான, 24 மணி நேர, ஹெல்ப் லைனை ஏற்படுத்தியுள்ளது.

பிறரால் தங்களுக்கு தொந்தரவு என கருதும் பெண்கள், இந்த எண்களை தொடர்பு கொண்டால் போதும், அந்த இடத்தில் வந்திறங்கும் சிவசேனா கட்சியினர், தொந்தரவு செய்பவர்களை, நன்கு, "கவனித்து' விடுவர்.

டில்லி சம்பவத்தை அடுத்து, சில நாட்களுக்கு முன் தான், மும்பையில் இந்த வசதியை, ஆதித்ய தாக்கரே ஏற்படுத்தியுள்ளார். தினமும், 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதாக கூறப்படுகிறது.அதுபோலவே, சிவசேனாவில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்து, முன்னணி தலைவராக விளங்கும், முன்னாள் முதல்வரும், இப்போதைய, மாநில அமைச்சருமான, நாராயண் ரானேயின் மகன், நிதேஷ் ரானே நடத்தி வரும், "சுவாபிமான் சங்கத்னா' அமைப்பும், பெண்களின் பாதுகாவலர்களாக மாறியுள்ளது.

இது பற்றி, ரானேயின் அமைப்பை சேர்ந்த பிரமுகர் ஒருவர் கூறியதாவது:எங்களுக்கு அழைப்பு வந்த உடனேயே அந்த இடத்தில் உள்ள எங்கள் கட்சியினரை உஷார்படுத்தி, சம்பவ இடத்திற்கு அனுப்பி, அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்குவோம். அடுத்த சில நிமிடங்களில், போலீசுக்கும் தகவல் தெரிவித்து, அவர்களும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள செய்வோம்.தொடர்ந்து சில நாட்களுக்கு அந்த விவகாரத்தை கண்காணிப்போம். இதனால் அந்த பெண்ணுக்கு, முழு அளவில் பாதுகாப்பு கிடைக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

3 comments:

G.M Balasubramaniam said...


நான் நல்ல பையனாக மாறிவிட்டேனே. படிக்கவில்லையா.பெண்களிடம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

http://bharathidasanfrance.blogspot.com/ said...


ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு
01.01.2013

முற்றும் அறிந்த அதிரா said...

நல்ல விஷயம் பகிர்ந்திருக்கிறீங்க.

Post a Comment