‘என்னை யாரும் கடத்தவில்லை‘ என்று நடிகை அஞ்சலி அவரது அண்ணன் ரவிசங்கரிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.
சித்தி பாரதி தேவி கொடுமை செய்வதாகவும் சொத்துகளை அபகரித்து விட்டதாகவும், அவருடன் சேர்ந்து இயக்குனர் களஞ்சியம் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் நடிகை அஞ்சலி கூறியிருந்தார்.
இந்நிலையில், ‘தனது தங்கை அஞ்சலியை திங்கள் கிழமை முதல் காணவில்லை. அவர் காணாமல் போனதற்கு பாரதி தேவிதான் காரணம்‘ என்று அவரது அண்ணன் ரவிசங்கர் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில் ரவிசங்கருடன் அஞ்சலி நேற்று போனில் பேசினார். அப்போது, ‘என்னை யாரும் கடத்தவில்லை. சித்தப்பா சூரி பாபு என் தலைமுடியை இழுத்து அடித்ததால் நான் ஓட்டலை விட்டு வெளியேறி விட்டேன். பாதுகாப்பான இடத்தில் இருக்கிறேன். இரண்டு நாளில் தைரியமாக வெளியே வந்து எல்லா உண்மைகளையும் சொல்வேன். என்னைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். என்னை காணவில்லை என்று கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிவிடு. சித்தி பாரதிதேவி மீது கொடுத்து புகாரை வாபஸ் வாங்க வேண்டாம்‘ என்று கூறியுள்ளார்.
அவர் நடித்து வரும் தெலுங்கு பட தயாரிப்பாளர் ரவிகிஷோரிடம் தொலைபேசியில் பேசிய அஞ்சலி, ‘குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டில் இருந்து வெளியேறிவிட்டேன். என்னால் ஏற்பட்ட இடையூறுக்கு வருந்துகிறேன். இன்னும் இரண்டு நாளில் திரும்பி வந்து நடித்துக் கொடுக்கிறேன்‘ என்று கூறியிருக்கிறார்.
இதற்கிடையில் அஞ்சலி ஓட்டலில் இருந்து வெளியேறும் வீடியோ காட்சியும், அஞ்சலியின் தொலைபேசி உரையாடலும் வெளியாகி உள்ளது. அதை போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள். அஞ்சலி காணவில்லை என்ற புகாரை போலீசார் திருப்பி தர மறுத்து விட்டனர். அவரை நேரில் ஆஜர்படுத்தினால் மட்டுமே புகாரை வாபஸ் பெற முடியும் என்று கூறிவிட்டனர். எந்த நிமிடமும் அஞ்சலி ஐதராபத்தில் மீடியா முன் தோன்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment