சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்க சமாஜ்வாதி கட்சி மாநிலத் தலைவர் இளங்கோயாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: நிதிநெருக்கடி, நிதிமுறைகேடு ஆகியவற்றால் சிக்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிராமப்புற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு கவுன்சிலிங் மூலமே மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை செய்யப்படுகிறது.
தனியார் நிர்வாகத்தின் கீழ் இருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகத்தை தமிழகஅரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பிறகு 2013-14 கல்வி ஆண்டில் நுழைவுத்தேர்வு மூலமே மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை கிராமப்புற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர்கள் நலனுக்கு எதிரானதும், தமிழகஅரசின் நிலைப்பாட்டிற்கு எதிரானதாகும். இப்பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் நுழைவுத்தேர்வு பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகித்துள்ளது. எனதே அதே நடைமுறையை தற்போது பின்பற்றுவது மீண்டும் முறைகேடுகள் நடைபெற்று விடுமோ என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையாக செயல்படும் தமிழக முதல்வர் அண்ணாமலைப் பல்கலையில் நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்து, கவுன்சிலிங் மூலம் அனுமதி சேர்க்கை நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளங்கோயாதவ் தெரிவித்துள்ளார்.
1 comment:
Thanks for sharing.......
Post a Comment