Pages

Search This Blog

Monday, December 16, 2013

ரூ. 50 லட்சம் கேட்டு ராசிக்கல் வியாபாரி கடத்தல்: 7 பேர் கைது

மன்னார்குடியில் திங்கள்கிழமை ரூ. 50 லட்சம் கேட்டு ராசிக்கல் வியாபாரியை கடத்தி சம்பவத்தில் ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்தவர் ராசிக்கல் வியாபாரி சுந்தர் ராஜன் (43). இவரது நண்பர் திருவாரூர் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர், சுந்தர்ராஜனிடம் வெளி நாட்டில் இருந்து ஒருவர் ராசிக்கல் வாங்க வந்திருப்பதாகவும்,

எனவே வெள்ளைக் கற்கள் எடுத்துவருமாறு கூறினாராம். இதையடுத்து, சுந்தர்ராஜன் ரூ. 3 லட்சம் மதிப்பிலான ராசிக்கற்கள் எடுத்துக்கொண்டு திங் கள்கிழமை காலை திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்துள் ளார். அ ப்போது சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏழு பேர் ஒரு காரில் சுந்தர்ராஜனை ஏற்றிக் கொண்டு நாள் முழுவதும் காரிலேயே பல்வேறு பகுதிகளில் சுற்றிக்கொண்டிருந்துள்ளனர்.

இதற்கிடையில், கடத்தலில் ஈடுபட்டவர்கள் சுந்தர்ராஜனை விடுவிக்க ரூ. 50 லட்சம் பணம் கேட்டு பேரம் பேசிவந்துள்ளனர். பேரத்தில் ரூ. 50,000 எடுத்துக்கொண்டு சுந்தர்ராஜனின் மைத்துனர் சரவணன் மன்னார்குடி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். கடத்தலில் ஈடுபட்டவர்கள் சரவணனை காரில் அழைத்துக்கொண்டு வேறு இடத்துக்கு செல்லும் போது, அவ்வழியே ரோந்து பணியில் சென்ற காவலர்கள் சந்தேகப்பட்டு விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையில் ராசிக்கல் வியாபாரி சுந்தர்ராஜன் கடத்தப்பட்டது தெரியவந்ததையடுத்து சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து, ஒரு இருசக்கர வாகனம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment