அமெரிக்கர்கள், முத்திரைகளை தயாரித்து அதனை விற்பனைக்கு விடலாம் என அண்மையில் அமரிக்க தபால் சேவை அண்மையில் தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தது.இதன்படி அமெரிக்காவை தளமாகக்கொண்ட ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு முதல்தர தபால் முத்திரைகளை வெளியிடவுள்ளது.
0.44 டொலர்கள் பெறுமதியில் இந்த முத்திரை வெளியிடப்படவுள்ளது.
இந்தநிலையில், இந்த சந்தர்ப்பத்தை அழிவுக்குள் இருந்து துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் இலங்கை தமிழர்களுக்காக பயன்படுத்தி அவர்களுக்கு தமது மரியாதையை வெளிப்படுத்தவேண்டும் என தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் இலங்கையில் துன்பப்பட்டு கொண்டிருக்கும் தமிழர்களின் நிலையை அமெரிக்காவின் சாதாரண பொதுமகனுக்கும் தெரியப்படுத்துவதே தமது நோக்கம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த முத்திரைகளை வெளியிடு;ம் முன்னர், அதன் வடிவமைப்புக்கு அமெரிக்க தபால் சேவை அங்கீகாரத்தை வழங்கவேண்டும்.
இந்தநிலையில் ஏனைய நாடுகளில் உள்ள தமிழர்கள், தமிழர் போராட்டத்திற்கான சின்னத்தை அச்சிட்டு வெளியிடுமாறு ஒபாமாவுக்கான அமைப்பை கேட்டுள்ளனர்.
அத்துடன், இந்த முத்திரைகளை தமது இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது

No comments:
Post a Comment