Pages

Search This Blog

Monday, August 08, 2011

கட் ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடுவது எப்படி ?

பிளஸ் 2 தேர்வில் கணிதப் பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இயற்பியல், வேதியியல் பாடங்களில் (இயல் அறிவியல் ) பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர எடுத்துக் கொள்வார்கள். கணிதப் பாடத்தில் 200 க்கு பெற்ற மதிப்பெண்களை 100 க்கு மாற்றுவார்கள். (200/2 =100. அதே போல் இயற்பியல் பாட மதிப்பெண்களை 200 க்கு பெற்ற மதிப்பெண்களை 50 க்கு மாற்றுவார்கள். (200/4=50 மதிப்பெண்கள்) இப்போது இந்த பாடங்களின் மொத்த மதிப்பெண்கள் கீழ்க்கண்டவாறு கணக்கிடுவார்கள்.
கணிதம் = 100 மதிப்பெண்கள்
இயற்பியல் = 50 மதிபெண்கள்
வேதியியல் = 50 மதிப்பெண்கள்
மொத்தம் = 200 மதிப்பெண்கள்
கவுன்சிலிங்கில் கலந்து கொள்வது எப்படி ?
பி.இ. படிப்புகளில் மாணவா;கள் கவுன்சிலிங்கில் (Counselling) Lகலந்து கொண்ட பின்னர்தான் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கவுன்சிலிங் (Counselling)கலந்து கொள்ளும் போது நினைவில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்:
மாணவர் சேர்க்கை நடைபெறும்போதே என்ன பாடத்தில் எந்த கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதை பெற்றோர், மாணவர் மற்றும் வழிகாட்டும் ஆசிரியர்கள் உதவியுடன் சிறப்பாக முடிவெடுக்க உதவுகின்ற வகையில் கவுன்சிலிங் அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை கவுன்சிலிங்கிற்கு அழைப்பார்கள். பிளஸ் 2 தேர்வில் கணிதம் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்களை 200க்கு மாற்றி மதிப்பெண்கள் அடிப்படையிலே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
L°Áp¦j G]T|• LX‹RÖš° ŒL²°eh SÖ·ÚRÖ¿• rUÖŸ 1000 UÖQY, UÖQ«L· L°Áp¦j LX‹‰ ÙLÖ·YÖŸL·.
கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களுடன் பெற்றோர் அல்லது உறவினர் அல்லது நண்பர்கள் யாரேனும் ஒருவரை உடன் அழைத்து வரவேண்டும்.
ஏற்கனவே மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல் புத்தகம் மற்றும் கல்லூரி தொகுப்பு புத்தகம் ஆகியவற்றிலுள்ள தகவல்களை கூர்ந்து படித்து எந்தக் கல்லூரியில் சேர்வது என முன்கூட்டியே முடிவு எடுத்துக் கொள்வது நல்லது.
``அடைந்தால் மகாதேவி இல்லை என்றால் மரணதேவி'' என்ற பாணியில் சில மாணவர்கள் "நான் படித்தால் அந்த காலேஜில்தான் படிப்பேன் இந்தக் காலேஜில்தான் படிப்பேன் அந்தப் பாடம் தான் சிறந்தது'' என ஏதாவது ஒரு கல்லூரியை தேர்ந்தெடுத்து, அந்தக் கல்லூரியில் மட்டும்தான் சேர வேண்டும் என்று முடிவோடு கவுன்சிலிங்கிற்கு வருகிறார்கள். இது சரியான முறையல்ல. பஸ்ஸில் ஒரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம். பிரேக் டவுண் ஆகிவிடுகிறது. அந்த பஸ்ஸில்தான் போவேன் என்று அடம் பிடித்துக் கொண்டா இருப்போம். அடுத்த பஸ் எப்போது வரும்? எப்படி பயணத்தை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்? என முடிவெடுத்துக் கொள்வது நல்லது.
பஸ் பயணத்திற்கு சிக்கல் வந்தபிறகு முடிவு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இது வாழ்க்கைப்பயணம் அல்லவா ? எனவே முன்கூட்டியே முடிவு எடுத்து ``இந்தக் கல்லூரியில் சேர்ந்து பின்னால் வருத்தப்படும் நிலை கூட ஏற்படுகிறது. இந்த நிலையை எளிதில் தவிர்க்கலாம்.

"ஒரு கல்லூரியின் தரத்தை எளிதில் இனம் கண்டுகொள்வது எப்படி? எந்தக் கல்லூரியில் உங்கள் பிள்ளையை சேர்க்க விரும்புகிறிர்களோ, அந்தக் கல்லூரிக்கு உங்கள் பிள்ளையை அழைத்துச் செல்லுங்கள். அந்தப் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்களை கல்லூரி நேரத்திற்கு பிறகு தனியாக அழைத்து கல்லூரியை பற்றிய விபரம் கேளுங்கள். அங்கு வசூலிக்கப்படும் கல்விகட்டணங்கள், நன்கொடைகள் பற்றியும் தெரிந்துக்கொள்ளுங்கள். அவர்கள் பெரும்பாலோர் சொல்லும் கருத்து நீங்கள் சரியான முடிவு எடுக்க உதவியாக இருக்கும். அந்தக் கல்லூரியில் ஆசிரியர்களையும் சந்தித்து விவரம் தெரிந்துக் கொள்ளுங்கள். கல்லூரியில் போதுமான வசதிகளுடன் ஆய்வுக்கூடம் உள்ளதா? வகுப்பறை வசதி உள்ளதா என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். இவை கல்லூரியை பற்றி அறிந்து கொள்ள நிச்சயம் உதவும்.

"ஒவ்வொரு கல்லூரிக்குப் போய் அது எப்படி இருக்கிறது என்று பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா? செலவாகுமே?'' என சில பெற்றோர்கள் எண்ணலாம். ஒரு மாணவர் பொறியியல் கல்லூரியில் தங்கி படித்து பட்டம் பெறுவதற்கு குறைந்தது 2 இலட்சம் ரூபாய் செலவாகிறது. 2 இலட்ச ரூபாயை கல்விக்காக செலவழிக்கும் முன்பு கல்வி நிறுவனங்கள் பற்றி சேகரிக்க இரண்டாயிரம் ரூபாய் செலவழித்தால் என்ன? செலவழிப்பது ஒன்றும் தப்பில்லையே.
கவுன்சிலிங்கில் கலந்து கொள்பவர்கள், ஒரு நாளைக்கு முன்பே கவுன்சிலிங் நடக்கும் இடத்திற்கு செல்வது நல்லது. ஏனென்றால் குறிப்பிட்ட நேரத்தில் அழைக்கும்போது கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள இது உதவும். குறிப்பாக எந்தக் கல்லூரியில் எந்தப் பாடப்பிரிவில் இன்னும் எவ்வளவு இடங்கள் காலியாக இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கவுன்சிலிங்கிற்கு செல்பவர்கள் கண்டிப்பாக சாதிச் சான்றிதழ் (Community Certificate) கொண்டு செல்ல வேண்டும். விண்ணப்பத்தில் குறிப்பிட்டப்படி உரிய தொகைக்கான வங்கி டிராப்டையும் கொண்டு செல்ல வேண்டும்.

கவுன்சிலிங்கில் கலந்து பின்பு எந்தக் கல்லூரியில் சேர வேண்டும் என்று முடிவு செய்த பின்பு அங்கு அதற்கான அத்தாட்சி கடிதம் தருவார்கள்.ஒரு தடவை முடிவு செய்த பின்பு மற்ற கல்லூரிக்கு மாற்ற முடியாது. எனவே தீவிரமாக ஆலோசனை செய்து முடிவு எடுப்பதே நல்லது.

1 comment:

Chitra said...

பகிர்வுக்கு நன்றிங்க.

Post a Comment