Pages

Search This Blog

Sunday, September 30, 2012

சோம்பேறித்தனம் நீங்க !

 





எப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல்
ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒரு வேலையில் மனம் ஈடுபடும் போது, அது இரண்டு நிலைகளில் செயல்பட்டு நம்மை அழைத்துச் செல்கிறது. 

   முதலாவது நிலையில் எப்போதும் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட்டிருப்பதால், கெட்ட எண்ணங்கள் மனதில் தோன்றாது. சோம்பித் திரியும்போதுதான், மனத்தில் எல்லாத் தீய எண்ணங்களும் தோன்றும்.  இரண்டாவது நிலையில், செயல்புரிவதன் மூலம் கர்மத்தளையை விலக்க முடியும். வேலையில் முழுமையாக ஈடுபடும்போது படிப்படியாக மனதில் வைராக்கியம் உதயமாகும்.

 சிறிய வேலையாயினும், பெரிய வேலையாயினும் அதை முழுமனதோடு அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யுங்கள். விரைந்தோடும் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பாக்குங்கள்.

 காலையிலும், மாலையிலும் சிறிது நேரமாவது பிரார்த்தனை, ஜபம், தியானம் செய்யுங்கள். அப்போது தான் நம் எண்ணங்கள், பேச்சு, செயல் அனைத்தும் உயர்ந்தவையாக நம்மை மேல்நிலைக்கு இட்டுச் செல்பவையாக அமையும்.

4 comments:

அன்னை சரோஜா பவுண்டேசன் said...

சோம்பேறி தனம் நீங்க நல்ல யோசனைகளை கொடுத்தீர்கள் நல்ல இருக்குடா

Thozhirkalam Channel said...

அனைவரும் பின்பற்ற வேண்டிய யோசனைகள்,,,

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல யோசனைகள்... மிக்க நன்றிங்க...

Anonymous said...

சிந்திக்க வேண்டிய விஷயம்! பகிர்விற்கு நன்றி!

Post a Comment