Pages

Search This Blog

Sunday, May 10, 2015

ரூ.4 ஆயிரம் கோடிக்கு கிரிக்கெட் சூதாட்டம்: அமலாக்க பிரிவு அதிகாரிகள் டெல்லியில் அதிரடி சோதனை 250 செல்போன்கள் பறிமுதல்



ரூ.4 ஆயிரம் கோடிக்கு நடந்ததாக கூறப்படும் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக டெல்லியில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 250 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது.

ரூ.4 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் 

கடந்த மார்ச் மாதம் 19–ந் தேதி குஜராத் மாநிலம் வதோதரா புறநகர் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பெரும் அளவில், 8–வது ஐ.பி.எல். போட்டிகள் தொடர்பாக சூதாட்டம் நடைபெறுவதாக அமலாக்க பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அங்கு சென்று சோதனை நடத்திய அவர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்தனர். தீவிர விசாரணைக்கு பின்னர் மேலும் 13 பேர் கைது ஆனார்கள்.

பின்னர், மார்ச் 26–ந் தேதி இதே அமலாக்க பிரிவினர் ரூ.4 ஆயிரம் கோடி அளவிற்கு சூதாட்டம் நடந்ததாக சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ், சந்தேகத்துக்குரிய மேலும் 2 முக்கிய நபர்கள் மற்றும் சிலர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

துபாயில் பதுங்கல் 

இவர்களில் ஒருவரான முகேஷ் சர்மா என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு இணையதளத்தின் உதவியுடன் கிரிக்கெட் சூதாட்டத்தை நடத்தி வருவதும் தெரிய வந்தது.

இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் முகேஷ் சர்மா துபாயில் இருந்து ‘லாகின் ஐ.டி, பாஸ்வேர்ட்’ பெற்று இந்திய வாடிக்கையாளர்களிடம் சூதாட்ட தொகையை பெறுவதும், விநியோகம் செய்வதும் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் இருந்து தப்பியோடிய முகேஷ் சர்மா தற்போது துபாய் நாட்டில் பதுங்கி இருப்பதாக அமலாக்க பிரிவு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

பாகிஸ்தான் தரகர் 

இந்த நிலையில் ஆமதாபாத் நகர அமலாக்க பிரிவினருக்கு, ஏற்கனவே கைதானவர்கள் மற்றும் சந்தேகத்துக்கு உரிய சூதாட்ட தரகர்களுடன் தொடர்புடைய சிலர் டெல்லி மற்றும் அரியானாவின் குர்கான் ஆகிய நகரங்களில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

குறிப்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த தரகர் ஒருவர் இந்த பெரும் சூதாட்டத்தில் ஈடுபடுவதை அமலாக்க பிரிவினர் கண்டுபிடித்தனர். கிரிக்கெட் சூதாட்டம் குர்கானில் நடைபெறுவதாகவும், இதற்கான பண பரிவர்த்தனை டெல்லி கரோல் பாக் பகுதியில் உள்ள 2 கட்டிடங்களில் நடப்பதாகவும் அமலாக்க பிரிவினருக்கு உறுதியான தகவல் கிடைத்தது.

250 செல்போன்கள் பறிமுதல் 

இதையடுத்து அவர்கள் உடனடியாக டெல்லி விரைந்தனர். அங்கு உள்ளூர் அமலாக்க பிரிவினர் உதவியுடன் டெல்லி கரோல் பார்க் பகுதியில் 2 கட்டிடங்கள், சாஸ்திரி நகர் மற்றும் குர்கான் ஆகிய 4 இடங்களில் நாள் முழுக்க அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது கிரிக்கெட் சூதாட்டத்துக்கு பயன்படுத்திய 250 செல்போன்கள், 10 லேப்–டாப் கம்ப்யூட்டர்கள், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை அவர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த 2 பேரை பிடித்து அவர்களிடம் அமலாக்க பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை, பெங்களூரு

டெல்லியில் நடத்தியதுபோலவே மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களிலும் அமலாக்க பிரிவினர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இது குறித்து, அமலாக்க பிரிவு வட்டாரங்கள் கூறுகையில், ‘‘அண்மையில் சில இடங்களில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் டெல்லியை மையமாக கொண்டு இதே போன்ற நடவடிக்கையில் ஈடுபடலாம் என்ற கோணத்தில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் சூதாட்ட தரகர் ஒருவரை குறிவைத்தும் இந்த சோதனை நடத்தப்பட்டது’’ என்றன.

எனினும் பாகிஸ்தான் தரகரின் பெயரை வெளியிட அமலாக்க பிரிவு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பாகிஸ்தானிலும் 8–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை மையமாக கொண்டு சூதாட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

4 பேர் கைது 

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை மங்களூரு நகர குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.16 லட்சம் மதிப்புள்ள தலா ஒரு கார், மோட்டார் சைக்கிள், சூதாட்டத்துக்கு பயன்படுத்திய 6 மொபைல் போன்கள், லேப்–டாப் மற்றும் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

Monday, December 16, 2013

ரூ. 50 லட்சம் கேட்டு ராசிக்கல் வியாபாரி கடத்தல்: 7 பேர் கைது

மன்னார்குடியில் திங்கள்கிழமை ரூ. 50 லட்சம் கேட்டு ராசிக்கல் வியாபாரியை கடத்தி சம்பவத்தில் ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்தவர் ராசிக்கல் வியாபாரி சுந்தர் ராஜன் (43). இவரது நண்பர் திருவாரூர் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர், சுந்தர்ராஜனிடம் வெளி நாட்டில் இருந்து ஒருவர் ராசிக்கல் வாங்க வந்திருப்பதாகவும்,

எனவே வெள்ளைக் கற்கள் எடுத்துவருமாறு கூறினாராம். இதையடுத்து, சுந்தர்ராஜன் ரூ. 3 லட்சம் மதிப்பிலான ராசிக்கற்கள் எடுத்துக்கொண்டு திங் கள்கிழமை காலை திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்துள் ளார். அ ப்போது சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏழு பேர் ஒரு காரில் சுந்தர்ராஜனை ஏற்றிக் கொண்டு நாள் முழுவதும் காரிலேயே பல்வேறு பகுதிகளில் சுற்றிக்கொண்டிருந்துள்ளனர்.

இதற்கிடையில், கடத்தலில் ஈடுபட்டவர்கள் சுந்தர்ராஜனை விடுவிக்க ரூ. 50 லட்சம் பணம் கேட்டு பேரம் பேசிவந்துள்ளனர். பேரத்தில் ரூ. 50,000 எடுத்துக்கொண்டு சுந்தர்ராஜனின் மைத்துனர் சரவணன் மன்னார்குடி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். கடத்தலில் ஈடுபட்டவர்கள் சரவணனை காரில் அழைத்துக்கொண்டு வேறு இடத்துக்கு செல்லும் போது, அவ்வழியே ரோந்து பணியில் சென்ற காவலர்கள் சந்தேகப்பட்டு விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையில் ராசிக்கல் வியாபாரி சுந்தர்ராஜன் கடத்தப்பட்டது தெரியவந்ததையடுத்து சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து, ஒரு இருசக்கர வாகனம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Wednesday, November 06, 2013

தேசியம்: திருநெல்வேலி விஞ்ஞானி மங்கள்யான் வெற்றியில்

தேசியம்: திருநெல்வேலி விஞ்ஞானி மங்கள்யான் வெற்றியில்:   செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கல திட்ட இயக்குனராக பணியாற்றிய நெல்லையைச் சேர்ந்த விஞ்ஞானி அருணனுக்க...

திருநெல்வேலி விஞ்ஞானி மங்கள்யான் வெற்றியில்

மங்கள்யான் வெற்றியில் திருநெல்வேலி விஞ்ஞானி
 
செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கல திட்ட இயக்குனராக பணியாற்றிய நெல்லையைச் சேர்ந்த விஞ்ஞானி அருணனுக்கு பாராட்டு குவிகிறது. இந்திய விண்வெளி துறையின் கனவு திட்டமான செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் திட்டம் நேற்று முன்தினம் நனவாகியது. பிஎஸ்எல்வி சி 25 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட மங்கள்யான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
 
 மங்கள்யான் வெற்றியில் திருநெல்வேலி விஞ்ஞானி டிசம்பர் 1ந் தேதி அது தனது செவ்வாய் கிரக பயணத்தை தொடங்க இருக்கிறது. 300 நாட்கள் தொடர்ந்து பயணம் செய்து செவ்வாய் கிரக சுற்று வட்ட பாதையை அது அடையும். இந்த திட்டம் வெற்றி பெறுவதன் மூலம் சர்வதேச அளவில் இந்தியாவி்ன் புகழ் அதிகரித்துள்ளது.
 
 இந்த வியத்தகு சாதனை படைத்த மங்கள்யான் செயற்கைகோளின் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் சுப்பையா அருணன். இவர் நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த கோதைசேரி என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சுப்பையா கூடங்குளம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். அருணன் ஆரம்ப கல்வியை திருக்குறுங்குடி அரசு பள்ளியிலும், உயர் கல்வியை பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியிலும் படித்தவர். கோவையில் பி.இ மெக்கானி்க்கல் இன்ஜினியரிங்கில் ஹானர் பட்டம் பெற்றார். இஸ்ரோ மையத்தில் 1984ம் பணியில் சேர்ந்து பின்னர் பதவி உயர்வு பெற்று பெங்களூரு இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். 
 
மங்கள்யாண் விண்கலத்தை உருவாக்கியது முதல் அதை வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்ற சிந்தனையுடன் அருணன் 24 மணி நேரமும் செயல்பட்டு வந்துள்ளார் என அவரது இளைய சகோதரர் தெரிவித்துள்ளார். அருணனின் சாதனையை பாராட்டி வள்ளியூர் பகுதியில் ஃபேஸ்புக் நண்பர்கள் சார்பில் அவருக்கு பாராட்டு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை தவிர பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அருணனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவரால் நெல்லை மண்ணுக்கு பெருமை ஏற்பட்டுள்ளது.

Thursday, October 31, 2013

கருமம்.. உடல் சுகத்திற்காக பெற்ற மகளை கள்ளக்காதலர்களை ஏவிக் கொன்ற பேய்...!

தனது உடல் சுகத்தையே பெரிதாக எண்ணிய ஒரு பெண் பேய், தான் பெற்றக் குழந்தை, தனது கள்ளக்காதலர்கள் இருவரை விட்டுக் கொலை செய்ய வைத்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
 
 அந்தக் கொடுமைக்காரப் பெண்ணின் பெயர் ராணி. 24 வயதாகிறது. திருமணமான இவருக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளாள். கணவரை விட்டுப் பிரிந்து தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார் இந்த ராணி. இந்த நிலையில் ஒரே சமயத்தில் இரண்டு ஆண்களுடன் கள்ளக்காதலில் திளைத்து வந்தார். அதில் ஒரு நபரின் பெயர் ரஞ்சித். இவர் லாரி டிரைவர். இன்னொரு நபரின் பெயர் கேசின். இந்த நபருக்கு வயது 19தான். இருவரும் ராணியுடன் நெருக்கமாகப் பழகினர். இதை ராணியும் ஏற்று ஒரே சமயத்தில் இருவருடனும் பழகி வந்துள்ளார்.
 
 இருவரின் நட்பு கிடைத்ததால் காமம் கண்ணை மறைக்க ஆரம்பித்தது ராணிக்கு. அதற்கு தனது மகள் பெரும் இடையூறாக இருப்பதாக நினைத்தார் ராணி. மகளைக் கொன்று விட்டு எப்போதும் இந்த இரு கள்ளக்காதலர்களுடன் உல்லாசமாக இருக்கவும் தீர்மானித்தார். 
 
தனது முடிவை இரு கள்ளக்காதலர்களிடமும் தெரிவிக்கவே, அவர்களும், ராணியுடனான இன்பம் தடைபடாமல் தொடர்ந்தால் போதும் என்று எண்ணி, சரி என்று கூறினர். கடந்த 29-ந் தேதி ராணி வேலைக்கு சென்று விட்ட நிலையில், வீட்டுக்கு வந்துள்ளனர் இரு கள்ளக்காதலர்களும். பின்னர் குழந்தையின் கழுத்தை கொடூரமாக நெரித்துக் கொலை செய்தனர்.
 பாவம், குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்து போனது. 
 
பின்னர் ஒரு ஜேசிபியில் குழந்தையின் உடலைப் போட்டு நீண்ட தூரம் சென்று குழி தோண்டிப் புதைத்துள்ளனர். இதெல்லாம் முடிந்த பின்னர் வீடு திரும்பிய ராணி குழந்தையைக் காணோம் என்று கூறி கண்ணீர் வீட்டுக் கதறி அழுது பெரிய்ய டிராமா போட்டுள்ளார். 
 
 மேலும் போலீஸிலும் ஒரு புகார் கொடுத்தார். ஆனால் போலீஸார் ராணியின் நீலிக் கண்ணீரை கண்டுபிடித்து விட்டனர். உரிய முறையில் விசாரித்தபோது குட்டு வெளிப்பட்டது... ராணியின் குரூரமான மறுபக்கமும் வெளிச்சத்திற்கு வந்தது. அதன் பின்னர் ராணியையும், அவரது இரு கள்ளக்காதலர்களையும் போலீஸார் கைது செய்தனர். உடல் சுகத்திற்காக இப்படி ஒரு கொடூரமா... ?

Tuesday, October 29, 2013

கரப்பான்பூச்சியை இனி அடிச்சு கொல்லாதீங்க!

 


 
 
ஒரு கரப்பான் விடாம அடிச்சி கொல்லுங்க... என்று இந்தியாவில் விளம்பரம் செய்கின்றனர். அந்த அளவிற்கு கரப்பான் பூச்சி என்றாலே அச்சமும் அருவெறுப்பும் உள்ளது நம்மவர்களிடம். 

 ஆனால் அண்டை நாடான சீனாவிலோ கராப்பான் பூச்சியை பொறித்து சாப்பிடுகின்றனர். கரப்பான் பூச்சி பண்ணை வைத்து வளர்ப்பவர்கள் கோடி கோடியாய் சம்பாதிக்கின்றனர்.
 
 உணவுக்குப் பயன்படுவதோடு மருந்துப் பொருளாகவும், அழகுசாதனப்பொருளாகவும் கரப்பான் பூச்சி பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே கரப்பான் பூச்சிக்கு சீனாவில் வரவேற்பு அதிகரித்துள்ளது. நம் ஊரில் வெறுத்து ஒதுக்கப்படும் கரப்பான்பூச்சியிடம் அப்படி என்னதான் இருக்கிறது மேற்கொண்டு படியுங்களேன். 

1.பூச்சிகளை சாப்பிடுறாங்க நாம் அடித்துக் கொல்லும் கரப்பான் பூச்சிகளையும், வெட்டுக்கிளிகளையும் பொறித்து, வறுத்து சாப்பிடுகின்றனர் சீனர்கள். அதேபோல தென்ஆப்பிரிக்கா, தென்அமெரிக்காவில் உள்ள மக்கள் கம்பளிப்புழு, வண்டு, தேள், குளவி போன்ற பூச்சி, புழுக்களை விரும்பி சாப்பிடுகின்றனர்.

2.கோடிக்கணக்கில் வருமானம் சீனாவில் மட்டும் நூற்றுக்கணக்கான கரப்பான் பூச்சி பண்ணைகள் இருக்கின்றன. ஒருகிலோ உலர்ந்த கரப்பான்பூச்சியின் விலை ரூ.2400. 61 ரூபாய் முதலீட்டில் 670 ரூபாய் லாபம் பார்க்கலாம் என்கின்றனர்.

3.விளம்பரம் நம்ஊரில் நாட்டுக்கோழி வளர்ப்பு, ஈமு கோழி வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு விளம்பரம் போல சீன டிவிகளில் கரப்பான்பூச்சி வளர்ப்பு பற்றிய விளம்பரங்கள் பிரபலமாக உள்ளனவாம். இனி நம் வீட்டிலும் கரப்பான் பூச்சிகளை கொஞ்சம் கருணையோடு பாருங்களேன்!

4.முடி வளரும் வழுக்கைத் தலையில் முடிவளர பல விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் சீனாவில் லீ ஷீவான் என்ற 78 வயது சீன வைத்தியர், கரப்பான் பூச்சிகளை அரைத்து, தன் வழுக்கைத் தலையில் தினமும் தேய்த்துக் கொண்டதால், முடி வளர்ந்ததாக கூறியுள்ளார். முகம் பளபளப்பாக கரப்பான் பூச்சியை அரைத்து பூசலாம் என்கின்றனர்.
 
5.எய்ட்ஸ்-புற்றுநோய் கரப்பான் பூச்சிகள் அணுக்கதிர் வீச்சையும் கூட தாங்கும் தன்மை கொண்டவையாம். இவற்றின் மூலம் எய்ட்ஸ், புற்றுநோய் போன்றவைகளுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

6.உயிர்காக்கும் மருத்துவம் கரப்பான் பூச்சியின் மூளைப் பகுதியிலிருந்து பெறப்படும் சிற்றளவிலான வேதிக் கூறுகள் நுண்ணுயிரிகளைக் கொல்வதில் 90% சக்தி கொண்டவையாக உளவாம். முதலில் இன்னும் விரிவான ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். பின் மருந்துவகைகள் ஆக்கப்பட வேண்டும். அதன் பிறகுதான் மருந்து சந்தைக்கு வரும்.

7.உயிர் காக்கும் கரப்பான் பூச்சியும் வெட்டுக்கிளியும் மனிதரின் உயிர் காக்கும் மருத்துவர்களாக மாறும் நாள் தொலையில் இல்லை என இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்கம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சைமன் லீ என்பவரின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Friday, August 23, 2013

ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு; அரசு வழக்கறிஞரை மாற்றக் கோரி திமுக மனு!

ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு; அரசு வழக்கறிஞரை மாற்றக் கோரி திமுக மனு!
 
 
 தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றக் கோரி திமுக பொதுச்செயலர் அன்பழகன் சார்பில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
1991-96ஆம் ஆண்டு காலத்தில் தமிழக முதல்வராக பொறுப்பு வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகாரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
 ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு; அரசு வழக்கறிஞரை மாற்றக் கோரி திமுக மனு! பல்வேறு தடைகளைத் தாண்டி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென திமுக சார்பில் கடந்த வாரம் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 
 
அம்மனுவில் தங்களையும் இந்த வழக்கில் வாதாட அனுமதிக்கக் கோரப்பட்டது. இதற்கு நீதிபதி அனுமதி அளித்திருந்தார். தற்போது திமுக பொதுச்செயலர் அன்பழகன் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 
 
அம்மனுவில், சொத்துக் குவிப்பு வழக்கை பெங்களூருக்கு மாற்றியதன் நோக்கத்துக்கு எதிராகவே தற்போது வழக்கின் நிலை இருக்கிறது. தற்போதைய அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றிவிட்டு திறமை வாய்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த மனு மீது வரும் திங்கள்கிழமையன்று விசாரணை நடைபெற உள்ளது.

Tuesday, August 20, 2013

தலைமைச் செயலக ஊழியர்களுக்கு உடற்பயிற்சி கூடம்

 

சென்னையில் அமைந்துள்ள அரசு தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் நலனைக் காக்கும் வகையில் உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் சுமார் 6,000 ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பணி புரிந்து வருகின்றனர். அவர்கள் அலுவலக நாட்களில் நீண்ட நேரம் பணிபுரிந்து வருவதுடன், விடுமுறை நாட்களிலும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுகிறார்கள்.

 தொடர்ந்து பல மணி நேரம் இருக்கையிலேயே அமர்ந்து பணிபுரிய வேண்டிய சூழ்நிலையினால், அவர்களது உடல்நலம் பாதிக்கப்படுகிறது.  ஊழியர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால், பணிகளை விரைவாகவும், குறித்தக் காலத்திலும் முடிக்க இயலும். அவர்களின் பணித்திறன் அதிகரிக்கவும் வழிவகை ஏற்படும். எனவே, 
அரசு ஊழியர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்க ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித் தனியே அனைத்து வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடங்களை,  தலைமைச் செயலகத்தில் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 
 இதன் அடிப்படையில்  50 லட்சம் ரூபாய் செலவில்  2,000 சதுர அடியளவில் ஆண்களுக்கான உடற்பயிற்சிக் கூடமும், 1,800 சதுர அடியளவில் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடமும் அமைக்கப்படும்.  இதில் 20 வகையான நவீன உடற்பயிற்சிக் கருவிகளை அமைக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கைகள், நல்ல ஆரோக்கியமான தமிழகத்தை  உருவாக்குவதற்கு வழிவகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, August 14, 2013

இணிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

அணைத்து  நல்ல உள்ளங்களுக்கும்  இணிய   சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்    

Tuesday, August 13, 2013

அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தெலங்கானாவுக்கு எதிர்ப்பு


 

தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 4.50 லட்சம் அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆந்திராவில் தொடங்கியது. இதனால் ஆந்திரா முழுவதும் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தெலங்கானா தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1ம் தேதி முதல் ராயலசீமா, கடலோர ஆந்திரா உள்ளிட்ட 13 மாவட்டங்களில் தொடர்ந்து பந்த் நடந்து வருகிறது. 14 நாட்களாக கடையடைப்பு, பஸ்கள் நிறுத்தம், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, அரசு ஊழியர், மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், உண்ணாவிரத போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் தினமும் நடைபெற்று வருகின்றன.காங்கிரஸ் காரிய கமிட்டியில் அறிவித்த தெலங்கானா முடிவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும், இதற்கு மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ, எம்எல்சிக்கள் உள்பட மக்கள் பிரதிநிதிகள் கட்சி வேறுபாடின்றி 12ம் தேதிக்குள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையேல் நள்ளிரவு முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என கடலோர ஆந்திரா, ராயலசீமா அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் சில மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் ஒரு சிலர் மட்டுமே ராஜினாமா செய்ததாலும், மத்திய அரசு தெலங்கானா மாநிலத்தை பிரிக்கும் விஷயத்தில் பிடிவாதமாக இருப்பதாலும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிமுதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் சீமாந்திரா பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. சீமாந்திரா பகுதிகளில் உள்ள 123 அரசு பணிமனைகளில் சுமார் 13 ஆயிரம் அரசு பஸ்கள் நள்ளிரவு முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பணிமனைகளுக்கு பூட்டு போடப்பட்டது. அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 70 ஆயிரம் பேர் பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் நேற்று அதி காலை முதல் நிறுத்தப்பட்டது.

இதனால் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது.திருப்பதி&திருமலைக்கு இடையே எப்போதும் இல்லாத வகையில் நேற்று நள்ளிரவு முதல் பஸ்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையிலிருந்து கைக்குழந்தை மற்றும் முதியோர்களுடன் திருப்பதிக்கு நடந்தே வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடங்கிய காலவரையற்ற இப்போராட்டத்தில் 4.50 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தினால் அனைத்து அரசு அலுவலகங்கள் பூட்டப்பட்டுள்ளது. கருவூல துறை அதிகாரிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்றதால் நாளொன்றுக்கு சுமார் 150 கோடிவரை பண பரிமாற்றம் முடங்கியுள்ளது.நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சீமாந்திரா பகுதியில் 24 மணிநேரம் பெட்ரோல் பங்க்குகள் பந்துக்கு ஆதரவு தெரிவித்து மூடப்பட்டது.

 இதனால் 13 மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் கிடைக்காத நிலை ஏற்பட்டது. சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், ஓட்டல், டீக்கடைகள் போன்றவை மூடப்பட்டுள்ளன. காய்கறி, பால், குடிநீர், மின்சாரம், அவசர மருத்துவ சேவை போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  ஒரு வார காலத்துக்குள் தெலங்கானா குறித்த அறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கூட முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும் என போராட்ட குழுவினர் எச்சரித்துள்ளனர்.

பஸ்களுக்கு தீவைப்பு
விஜயவாடாவில் உள்ள அரசு பணி மனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பஸ்களுக்கு ஆர்ப்பாட்டகாரர்கள் நேற்று தீயிட்டு கொளுத்தினர். இதுகுறித்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பஸ்கள் மீது தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர்.